அமீரக செய்திகள்

துபாய்: குடியிருப்புக் கட்டிடத்தில் இரவு ஏற்பட்ட பயங்கர தீவிபத்து..!!

துபாயில் இருக்கக்கூடிய பர்ஷா ஹைட்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் புதன்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்புக் கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த தீவிபத்தை அறிந்த துபாய் குடிமைத் தற்காப்புப் பிரிவினர் உடனடியாக அவசரநிலைக்குப் பதிலளித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

துபாய் ஊடக அலுவலகத்தின் ட்வீட் படி, அதிகாரிகள் கட்டிடத்தில் இருந்து அனைத்து குடியிருப்பாளர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றினர் மற்றும் இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. தீவிபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தீப்பிடித்து எரிந்த கட்டிடத்தின் வெளிப்புறத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன.

Related Articles

Back to top button
error: Content is protected !!