அமீரக செய்திகள்

வீடியோ: அமீரகத்தில் பெய்த ஆலங்கட்டி மழை..!! சாலையில் சிதறி கிடக்கும் பனிக்கட்டிகள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ஃபுஜைராவின் மைதாக் பகுதி மற்றும் மசாபி – தௌபன் சாலையில் ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழை பெய்துள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பில் வானிலை பொதுவாக சீராகவும் சில நேரங்களில் ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும் என ஏற்கெனவே NCM தெரிவித்திருந்தது. மேலும் அந்த அறிக்கையில், பிற்பகலில் கிழக்கு நோக்கி மழைவெப்ப மேகங்கள் உருவாகும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று பெய்த ஆலங்கட்டி மழையினால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மழையைக் காட்டும் வீடியோ ஒன்றில் குடியிருப்பாளர்கள் பனிக்கட்டிகளை சேகரிப்பதையும் காரின் டேஷ்போர்டில் பனிக்கட்டிகளை வைத்து அரிய வானிலையைப் படம்பிடித்து மகிழ்ச்சியுடன் கூச்சலிடுவதையும் காணலாம்.

மேலும் மற்றொரு வீடியோவில், மலைப்பாங்கான பகுதி வழியாகச் செல்லும் போது ஆலங்கட்டி மழையின் மூலம் கார்கள் மற்றும் சாலைகளில் பனிக்கட்டிகள் சிதறி விழுவதைக் காணலாம். 

 

இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கைகளை தேசிய வானிலை மையம் வெளியிட்டுள்ளது. மேலும் வெளியில் செல்லும் குடியிருப்பாளர்கள் மிக கவனத்துடன் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!