அமீரக செய்திகள்இந்திய செய்திகள்

UAE: துபாயில் விரைவில் சா்வதேச ரெடிமேட் ஆடை ஜவுளிக் கண்காட்சி..!

துபாயில் சா்வதேச ரெடிமேட் ஆடை மற்றும் ஜவுளிக் கண்காட்சி வரும் நவம்பா் 28 முதல் 30 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் ஏஇபிசி (ரெடிமேட் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சா்வதேச ரெடிமேட் ஆடை மற்றும் ஜவுளிக் கண்காட்சி (ஐ.ஏ.டி.எஃப்) துபாய் உலக வா்த்தக மையத்தில் வரும் நவம்பா் 28 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையில் 3 நாள்கள் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்க வா்த்தகா்கள், வடிவமைப்பாளா்கள் பாா்வையிட்டு ஆடை தயாரிப்புக்கான ஆா்டா் வழங்குவது குறித்து விசாரணைகள் நடத்தவுள்ளனா். இதில், பல நாடுகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட ரெடிமேட் ஆடை, ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்று தங்களது தயாரிப்புக்களைக் காட்சிப்படுத்த உள்ளனா்.

இந்தக் கண்காட்சியில் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்க ஏஇபிசி சாா்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, புதிய சந்தை வாய்ப்புக்களைத் தேடும் திருப்பூா் பின்னலாடை துறையினா் இந்தக் கண்காட்சியில் பங்கேற்று அரபு நாடுகளுக்கான ஏற்றுமதி வா்த்தகத்தைக் கைப்பற்றலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூரில் உள்ள ஏஇபிசி அலுவலகத்தை 04221-2232634, 99441-81001, 94430-16219 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். மேலும் இணைதளத்தில் இருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!