அமீரக செய்திகள்

அமீரகத்தின் 24 மணிநேர சேவைகளுக்காக புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ள MOHRE..!

அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகமான (MoHRE) வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளவும், விசாரணைகளை சமர்பிக்கவும் WhatsApp Business கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் சேவைகள் கிடைக்கும், மேலும் வாடிக்கையாளர்கள் 600590000 என்ற எண்ணின் மூலம் அமைச்சகத்தை தொடர்புக்கொள்ளலாம்.

வாட்ஸ்அப்பின் உரிமை நிறுவனமான Meta-வால் சரிபார்க்கப்பட்ட புதிய கணக்கில் முதலாளிகள், ஊழியர்கள் மற்றும் வீட்டு வேலை செய்பவர்கள் 24 மணி நேரமும் MoHRE-ஐத் தொடர்பு கொள்ள வழங்குகிறது. இதன் மூலம் அமீரகத்தில் சரிபார்க்கப்பட்ட  முதல் கூட்டாட்சி நிறுவனமாக WhatsApp Business மாறியுள்ளது.

தனியார் துறையில் (அமீரக தொழிலாளர் சட்டம்) தொழிலாளர் உறவுகளின் சட்டத்தையும் அதன் நிர்வாக விதிமுறைகளையும் பயனர்கள் பார்க்கலாம். அமீரகத்தில் பணிச்சூழலை ஒழுங்குபடுத்தும் வீட்டு உதவியாளர்கள் மற்றும் பிற ஆணைகள் பற்றிய சட்டத்தையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியும். சேவை சேனல் பயனர்களின் தரவு தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் நம்பகமான தகவலை வழங்குகிறது.

தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி துணைச் செயலர் ஆயிஷா பெல்ஹார்ஃபியா கூறுகையில், “இந்த புதிய வாட்ஸ்அப் சேவையானது, அமைச்சகத்தின் வாடிக்கையாளர்களுடன் திறம்பட தொடர்புகொள்வதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட பாதுகாப்பான தொழில்நுட்பத்தில் இயங்கும். இதில் நவீன வசதிகளைப் பயன்படுத்தும் சேனல்களும் அடங்கும். தொழில்நுட்பங்கள் மற்றும் ஸ்மார்ட் மொபைல் பயன்பாடுகள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யவும் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு ஏற்ப பணிச்சூழலையும் மேம்படுத்துகிறது.”

MoHRE Whatsapp Business கணக்கு மூலம் நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் இங்கே:

  • உங்கள் பரிவர்த்தனை நிலையைச் சரிபார்க்கலாம்.
  • வேலைவாய்ப்பு விதிமுறைகளைப் பற்றி அறிந்துக்கொள்ளலாம்.
  • வீட்டு வேலை செய்பவர்களின் சட்டம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
  • அமீரக தொழிலாளர் அமைச்சகத்தின் தீர்மானங்கள், ஆணைகள், சட்டங்கள் ஆகியவற்றை அறிந்துக்கொள்ளலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!