UAE: துபாயில் ஏற்பட்ட பாராமோட்டார் விமான விபத்தில் விமானி உயிரிழப்பு..!

துபாயில் நேற்று முன்தினம் காலை நேரத்தில் பாராமோட்டர் விமானம் விபத்துக்குள்ளானதில் அதன் பைலட் இறந்துவிட்டதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (GCAA) ட்வீட்டரில் தெரிவித்துள்ளது.
பாலைவன நகரமான மார்கம் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்த காரணத்தை GCAA விசாரித்து வருகிவதாகவும் கூறியுள்ளது. உயிரிழந்தவரின் குடும்பம் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் GCAA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர் தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் ஆகும்,
முன்னதாக ஆகஸ்ட் 29 திங்கட்கிழமை அபுதாபியின் கிராண்ட் மசூதி அருகே ஒற்றை இருக்கை கொண்ட செஸ்னா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் கூறினர், பின்னர் அந்த சம்பவத்தில், காயமடைந்த விமானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று GCAA தெரிவித்துள்ளது.