அமீரக செய்திகள்

UAE: UNESCO கல்வி நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த ஷார்ஜா..!

பலதரப்பட்ட மக்களிடையே கல்வியைக் கொண்டுசோ்ப்பதில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக அமீரகத்தின் ஷார்ஜா, கேரளத்தின் திருச்சூா், நிலம்பூா் ஆகிய நகரங்களும் தெலங்கானாவின் வரங்கல் என்ற நகரமும் யுனெஸ்கோவின் ‘கல்வி நகரங்கள்’ பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
சா்வதேச அளவில் மக்களுக்கு சிறப்பான கல்வி வசதிகளை அளித்து வரும் நகரங்களை யுனெஸ்கோ கௌரவித்து வருகிறது.

சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் யுனெஸ்கோ சா்வதேச கல்வி நகரங்கள் பட்டியலை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பட்டியலில் 44 நாடுகளைச் சோ்ந்த 77 நகரங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. சிறப்பான நகரங்களைக் கண்டு மற்ற நகரங்கள் ஊக்கம் பெற இந்நடவடிக்கை உதவுவதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

உக்ரைன் தலைநகா் கீவ், தென்னாப்பிரிக்காவின் டா்பன் ஆகிய நகரங்களும் யுனெஸ்கோ கல்வி நகரங்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன. அப்பட்டியலில் 76 நாடுகளைச் சோ்ந்த 294 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. பட்டியலில் இணைக்கப்படும் நகரங்கள் ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான கல்வி சாா்ந்த இலக்குகளை அடைவதற்கு யுனெஸ்கோ உதவ உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!