அமீரக செய்திகள்

அமீரகத்தில் பெய்த கோடை மழை.. வாகன ஓட்டிகளுக்கு தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவுரை..!

ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் நேற்று மாலை கடுமையான கோடை மழை பெய்துள்ளது. இது குறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அல் ஐனில் உள்ள காட்ம் அல் ஷிக்லா மற்றும் அல் ரீஃப் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளதாக கூறியுள்ளது.

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM)-இன் சமூக வலைதள பக்கத்தில் நாட்டில் மழை பெய்த பல வீடியோக்களை வெளியிட்டுள்ளது. மேலும் அமீரகத்தில் வெப்ப நிலை சிறிதளவு குறைந்துள்ளதாகவும் அமீரக நேரப்படி 14:30 மணிக்கு ஒட்வைத் அல் தஃப்ரா பகுதியில் Owtaid (Al Dafra) 45.6°C டிகிரி பதிவானதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தீவிர வானிலையின் போது ஈரமான சாலைகளில் வாகனம் ஓட்டிகள் விழிப்புடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றா வேண்டும் என்று NCM தெரிவித்துள்ளது

Related Articles

Back to top button
error: Content is protected !!