Uncategorized

அமீரகத்தில் குறைந்த எரிபொருள் விலை.. டாக்ஸி கட்டணத்தை குறைத்த எமிரேட்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலையானது குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து அஜ்மானில் டாக்ஸி கட்டணங்களானது குறைக்கப்பட்டுள்ளன. இது டாக்ஸி சேவைக்கான தேவை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ளது.  

அமீரகத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள எரிபொருள் விலை பின்வருமாறு:

  • செப்டம்பர் 1 முதல் சூப்பர் 98 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.41 திர்ஹம்ஸாக குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் சூப்பர் 98 பெட்ரோல் லிட்டருக்கு 4.03 திர்ஹம்ஸாக இருந்தது.
  • ஸ்பெஷல் 95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3.30 திர்ஹம்ஸாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஆகஸ்டில் 3.92 திர்ஹம்ஸாக இருந்தது.
  • இ–பிளஸ் 91 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.22 திர்ஹம்ஸாக குறைந்துள்ளது. ஆக்ஸ்ட் மாதம் இ–பிளஸ் 91 பெட்ரோல் லிட்டருக்கு 3.84 திர்ஹம்ஸாக இருந்தது.
  • டீசல் விலை லிட்டருக்கு 3.87 திர்ஹம்ஸாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஆகஸ்டில் 4.14 திர்ஹம்ஸாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜ்மான் பொதுப் போக்குவரத்து ஆணையத்தின் (APTA) இந்த நடவடிக்கையானது, விலைகளை அதிகரிக்காமல் பயனர்களின் வசதிக்காகப் பங்களிக்கும் பயனுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கைகளைப் பின்பற்றி சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

APTA இன் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தக் கட்டணக் குறைவானது, எமிரேட்டில் உள்ள முக்கியத் துறையான போக்குவரத்தை மேம்படுத்தவும், டாக்ஸி பயனாளர்களை மகிழ்ச்சியடையச் செய்யவும் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் மாற்றத் திட்டங்களின் வெற்றியைக் குறிக்கிறது” என தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த கட்டண மாற்றம் ஸ்மார்ட் மீட்டர் அமைப்பில் தானாகவே புதுப்பிக்கப்படும் என்றும், இது டாக்ஸி துறைக்கு ஆணையம் வழங்கும் சேவைகளின் அளவை உயர்த்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!