பஹ்ரைனில் 6 மாதத்திற்கு செல்லுபடியாகும் புதிய இ-விசா அறிமுகப்படுப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு..!

பஹ்ரைனில் புதிய மல்டி என்ட்ரி இ-விசாக்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக தேசியம், பாஸ்போர்ட் மற்றும் குடியிருப்பு விவகாரங்கள் (NPRA) அறிவித்துள்ளது. விசா பயிற்சி நோக்கங்களுக்காக வழங்கப்படும் இந்த விசாக்கள் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்று பஹ்ரைன் செய்தி நிறுவனம் (BNA) தெரிவித்துள்ளது.
பஹ்ரைனின் பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபா தலைமையிலான NPRA சேவையை மேம்படுத்துவதற்கான 24 முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விசா நடைமுறைக்கு வர உள்ளது. இதன் உயர்தர சேவைகளை வழங்குவதற்கு உள்துறை அமைச்சர் ஜெனரல் ஷேக் ரஷித் பின் அப்துல்லா அல் கலீஃபாவின் உத்தரவுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட உள்ளது.
இந்த புதிய விசாவை ஆறு மாதங்களுக்கு நீட்டித்துக்கொள்ளலாம் என்றும் ஆர்வமுள்ளவர்கள் 60 பஹ்ரைன் தினார் கட்டணத்தில் www.evisa.gov.bh என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.