அமீரக சட்டங்கள்

UAE: ‘Labour Ban’ என்ற தொழிலாளர் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் யார்..?? சட்டம் கூறுவது என்ன..??

நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிகிறீர்கள் என்றால், நாட்டின் தொழிலாளர் சட்டத்தை மீறிய தொழிலாளர்கள் மீது விதிக்கப்படும் தொழிலாளர் தடை (labour ban) பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இருப்பினும், சட்டத்தின்படி, ஒரு வருட வேலைத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட சில வகை தொழிலாளர்களும் உள்ளனர்.

அவ்வாறு தொழிலாளர் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் தொழிலாளர்களின் பிரிவுகள் எவை மற்றும் சட்டத்தின்படி தடை விதிக்கப்படக்கூடிய பல்வேறு சூழ்நிலைகள் என்ன? என்பது குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ப்ரொபேஷன் காலம் முடியும் முன்பு (probation period) வேலையை விட்டுச் செல்வதற்கான தொழிலாளர் தடை

ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழிலாளர் சட்டம் 2021 பிரிவு 9 -ன் ஃபெடரல் ஆணை எண். 33 -ன் படி, ப்ரொபேஷன் நிலையில் இருக்கும் தொழிலாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேற முடிவுசெய்து, தொழிலாளர் சட்டத்தின்படி தங்கள் முதலாளிக்கு முறையான அறிவிப்பை வழங்கத் தவறினால், அவர்களுக்கு ஒரு வருடத்திற்கான வேலை தடை (work ban) விதிக்கப்படும்.

இருப்பினும், திருத்தப்பட்ட புதிய சட்டம் 2022 பிரிவு 11 -ன் அமைச்சர் ஆணை எண். 1 – ன் படி உங்கள் பணி அனுமதிப் பத்திரத்தில் தடை விதிக்கப்படாமல் இருப்பதற்குப் போதுமான வழிமுறைகளும் காரணங்களும் குறிப்பிடப்பட்டிருந்தால், தொழிலாளர்கள் ப்ரொபேஷன் காலத்தின் போது வேலையை விட்டு வெளியேற முடிவு செய்தாலும் அவர்களுக்கு கூட தடைவிதிக்கப்படாது. அவை:

1) நாட்டிற்கு அவசியமாக தேவைப்படும் வேலைத் துறையில் இருக்கும் தொழிலாளர்கள்

2) ஃபேமிலி ஸ்பான்சர் விசாவின் கீழ் இருக்கும் ஒரு தொழிலாளி

3) கோல்டன் விசா வைத்திருப்பவர்கள்; மற்றும்

4) மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு வகைப்பாட்டின்படி, அமைச்சகத்தால் தீர்மானிக்கப்படும் நாட்டின் தொழிலாளர் சந்தையின் அவசிய தேவைகளுக்கு ஏற்ப எந்தவொரு துறைகளிலும் வேலை செய்யும் தொழிலாளர்கள்.

ப்ரொபேஷன் காலத்துக்குப் பிறகு வேலையை விட்டுச் செல்வதற்கான தொழிலாளர் தடை

ப்ரொபேஷன் நிலையில் இல்லாத தொழிலாளர்களைப் பொறுத்தவரை, ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் சட்டத்தின் பிரிவு 50 ஆணை எண் 1 ன் படி, ஒரு சட்டவிரோத காரணத்திற்காக, ஒப்பந்தக்காலம் முடிவதற்குள், வெளிநாட்டுத் தொழிலாளி வேலையை விட்டு வெளியேறினால், அவருக்கு வேலையை விட்டு நீங்கிய நாளிலிருந்து ஒரு வருட காலத்திற்கு, நாட்டில் மற்றொரு வேலையில் சேருவதற்கான புதிய பணி அனுமதி வழங்கப்படாது. மேலும் அந்த காலகட்டத்தில் அவரைப் பணியமர்த்தவோ அல்லது அவரை சேவையில் வைத்திருக்கவோ எந்த முதலாளியும் அனுமதிக்கப்படுவதில்லை.

இருப்பினும், சட்டப்பிரிவு 50 ஆணை எண் 2 ல் குறிப்பிடப்பட்ட நடைமுறைகளின் கீழ், சிலவேலைப் பிரிவுகள், திறன் நிலைகள் அல்லது குறிப்பிட்ட சில தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்கலாம் என மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MOHRE) கூறுகிறது. பின்னர் வெளியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானம் – 2022 இன் அமைச்சர் ஆணை எண். 1 – விதி 28 (2) இல் அத்தைகய விதிவிலக்குகள் கூறப்பட்டுள்ளன. அவை

1) குடும்பத்தால் வழங்கப்படும் ரெசிடென்ஸ் விசாவை வைத்திருக்கும் தொழிலாளி.

2) வேலையை விட்டு நீங்கி அதே நிறுவனத்தில் மீண்டும் புதிய பணி அனுமதிக்கு விண்ணப்பிக்கும் தொழிலாளி.

3) நாட்டிற்கு தேவையான தொழில்முறை தகுதிகள், அதீத திறன்கள் அல்லது அறிவாற்றலை கொண்ட தொழிலாளி.

4) கோல்டன் விசா வைத்திருப்பவர்கள். மற்றும்

5) மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு வகைப்பாட்டின்படி, அமைச்சகத்தால் தீர்மானிக்கப்படும் நாட்டின் தொழிலாளர் சந்தையின் அவசிய தேவைகளுக்கு ஏற்ப எந்தவொரு துறைகளிலும் வேலை செய்யும் தொழிலாளர்கள்.

இருப்பினும், நீங்கள் விலக்கு அளிக்கப்பட்ட வகைகளில் ஏதேனும் ஒன்றில் இல்லையென்றாலும், உங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பினால், மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தை அணுகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!