அமீரக செய்திகள்

UAE: 432 உலகளாவிய குறிகாட்டிகளில் முதல் 10 இடங்களில் இடம்பெற்ற அமீரகம்.. 19 இடங்களில் முதலிடம் பெற்று சாதனை..!

ஃபெடரல் போட்டித்திறன் மற்றும் புள்ளியியல் மையம் (FCSC) தரவுகளின்படி, அமீரகம் 19 உலக போட்டித்திறன் குறிகாட்டிகளில் முதலிடத்தில் உள்ளது, மேலும் 432 போட்டித்திறனில் முதல் 10 இடங்களுக்குள் உள்ளது. இத்தகைய உலகளாவிய குறியீடுகளில் 30 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்தக் குறிகாட்டிகள், கல்வி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, ஒழுங்குமுறைகளின் நெகிழ்வுத்தன்மை, செழிப்பு, நிர்வாகம் மற்றும் பலவற்றில் அமீரகம் சிறந்து விளங்குவதைக் காண்கிறது.

மேலாண்மை மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனம் (International Institute for Management Development – IMD), உலகப் போட்டித்தன்மை ஆண்டு புத்தகம் (World Competitiveness Yearbook – WCY) மற்றும் லெகாட்டம் (Legatum Institute) நிறுவனம் வழங்கிய தரவுகளும் இதில் அடங்கும். IMD மற்றும் WCY தரவுகளின்படி, அமீரகம் 88.67 மதிப்பெண்களுடன் 100 போட்டித்திறனில் உலகளவில் 12 வது இடத்தில் உள்ளது.

(World Competitiveness Yearbook – WCY) தரவுகளின் செயல்திறனைப் பொறுத்தவரை, பொருளாதார செயல்திறனில் 6வது இடத்திலும், அரசாங்க செயல்திறனில் 3வது இடத்திலும், வணிகத் திறனில் 17வது இடத்திலும் மற்றும் உள்கட்டமைப்பில் 26வது  இடத்திலும் உள்ளது.

(International Institute for Management Development – IMD) உலகளாவிய போட்டித்தன்மையில் உள்ள 64 நாடுகளை வகைப்படுத்தி அதன் வகைப்பாட்டை முக்கிய அடிப்படையில் கொண்டுள்ளது. அவை பொருளாதார செயல்திறன், அரசாங்க செயல்திறன், வணிக செயல்திறன் மற்றும் உள்கட்டமைப்பு ஆகும். மேலும் சட்டமன்ற நிர்வாக மற்றும் சமூக துறைகள். நாடுகளின் போட்டித்தன்மையை அளவிடும் மிகவும் குறிகாட்டியாகக் கருதப்படுகிறாது. (World Competitiveness Yearbook – WCY) 338 குறிகாட்டிகளைப் பயன்படுத்தி நாடுகளும் நிறுவனங்களும் எவ்வாறு செழிப்பு அடைகின்றன என்பதை மதிப்பிடுகின்றன.

(World Competitiveness Yearbook – WCY) உலகளாவிய போட்டித்தன்மை ஆண்டு புத்தகத்தின்படி, 2022 இல் முதல் ஐந்து நாடுகள் பின்வருமாறு இயங்குகின்றன:

1. டென்மார்க், 2.சுவிட்சர்லாந்து, 3. சிங்கப்பூர், 4.ஸ்வீடன், 5. ஹாங்காங்.

Related Articles

Back to top button
error: Content is protected !!