வளைகுடா செய்திகள்

சவூதி அரேபியா: வழிபாட்டாளர்கள் சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்து..!! 27 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

சவூதி அரேபியாவின் புனித நகரமான மக்காவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதையடுத்து அந்த பேருந்தில் பயணம் செய்து வந்த 27 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் மேற்கு நகரமான தைஃபில் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு எட்டு ஆம்புலன்ஸ் குழுக்கள் அனுப்பப்பட்டதாகவும், அங்கு 38 பேருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் 27 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பேருந்து விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இந்த விபத்தில் பேருந்து கவிழ்ந்து கிடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!