அமீரக செய்திகள்

துபாய்: அபுதாபி நோக்கி செல்லும் முக்கிய சாலையில் வாகனங்கள் மோதி விபத்து.. வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை..!!

துபாயில் இருந்து அபுதாபி நோக்கி செல்லும் முக்கிய சாலையில் பல வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.   

துபாயில் இருந்து அபுதாபி நோக்கி செல்லும் ஷேக் முகமது பின் சையத் சாலையில் பல வாகனங்கள் மோதியதாகவும் மிர்திஃப் பிரிட்ஜிற்கு முன்பாக இந்த விபத்து நடந்துள்ளதாகவும் காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

இந்த விபத்து காரணமாக, சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை ஓட்டுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

Related Articles

Back to top button
error: Content is protected !!