வளைகுடா செய்திகள்

வெளிநாட்டு தொழிலாளர்களை குறைக்க குவைத்தின் புதிய திட்டம்..!! குறிப்பிட்ட தொழிலாளர்களின் work permit புதுப்பிக்கப்படாது என தகவல்..!!

குவைத் அரசானது நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு கடந்த சில வருடங்களாகவே முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்பொழுது வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்க குவைத்தில் பல தேவையற்ற வேலைகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் நீக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான ஆவணங்களை மறுஆய்வு செய்வதற்கான திட்டத்தை குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன் (CSC) அடுத்த ஆண்டு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவிக்கையில், “CSC மூன்று கட்டங்களாக இந்த திட்டத்தைத் மேற்கொள்ளும். இது வெளிநாட்டவர்களின் ஆவணங்களை மறுபரிசீலனை செய்வதையும், மக்கள்தொகை ஏற்றத்தாழ்வை சரிசெய்வதையும், விதிகளை மீறும் தொழிலாளர்களை நாடு கடத்துவதையும், செயல்பாட்டில் இருக்குத் வேலைக்கான பெர்மிட் செல்லுபடியாகும் நிலையில் இருப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட அரசாங்க நடவடிக்கைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டத்தின் முதல் பகுதியாக, அனைத்து கவர்னரேட்களிலும் உள்துறை அமைச்சகம் மற்றும் நகராட்சியுடன் ஒருங்கிணைந்து தொடர்ச்சியான ஆய்வுப் பிரச்சாரங்களைத் தொடங்குவதாகும் என கூறப்பட்டுள்ளது. இதில் விதிகளை மீறி வசிப்பவர்கள் அனைவரும் உடனடியாக நாடுகடத்தப்படுவார்கள் மற்றும் அவர்களின் ஸ்பான்சர்கள் நாடுகடத்தலுக்கு உண்டான செலவுகளுடன் சேர்த்து மற்ற கட்டணங்களையும் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தில், தேவையற்ற வேலைகளுக்கு பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையானது குறைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி அந்த வேலையில் இருக்கும் நபர்களின் காலாவதியாகும் பணி அனுமதி (work permit) புதுப்பிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது கட்டமாக தொழிலாளர் சந்தையில் தேவைப்படும் தொழில்முறை வேலைகளுக்கான பணி அனுமதிகள் மட்டுமே தொழில்முறை சோதனைகளுக்கு உட்பட்டு வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த செயல்முறைகளை மேற்கொள்வதன் மூலம் அடுத்த ஆண்டில் ஒட்டுமொத்த குவைத் மக்கள்தொகையானது வீழ்ச்சியைக் காணும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!