அமீரக செய்திகள்

UAE: தேசிய தினத்தை முன்னிட்டு 1,040 சிறைகைதிகளுக்கு விடுதலை அளித்துள்ள துபாய் மன்னர்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் 51வது தேசிய தினத்தை முன்னிட்டு அமீரகத்தில் உள்ள 1,040 கைதிகளை விடுவிக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மன்னிப்பானது, கைதிகளுக்கு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கும் அவர்களது குடும்பங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதற்கும் ஷேக் முகமதுவின் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை அமல்படுத்த துபாய் காவல்துறையுடன் துபாய் பப்ளிக் பிராசிகியூஷன் ஒருங்கிணைக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், இது போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில், அமீரகத்தின் ஆட்சியாளர்கள் நூற்றுக்கணக்கான கைதிகளை மன்னித்து விடுதலை அளித்து வருகிறார்கள். இந்த செயலானது குடும்பங்களை ஒன்றாக வைத்திருக்கவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் முயல்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!