அமீரக சட்டங்கள்

அமீரக வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய பார்க்கிங் அபராத பட்டியல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை முறையாக நிறுத்துவதை உறுதி செய்வதற்காக வாகனம் நிறுத்தும் இடம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் இந்த வாகன நிறுத்தும் இடத்தை முறையாக பின்பற்றி தங்களது வாகனங்களை பார்க்கிங் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுவதோடு விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்படுகின்றது.

ஒரு வாகன ஓட்டியின் முறைகேடான அல்லது சட்டவிரோதமான பார்க்கிங், மற்றொரு வாகன ஓட்டி தனது காரை பார்க்கிங் செய்வதற்கு இடையூறாக இருக்கலாம். மேலும் சட்டவிரோதமாக பார்க்கிங் செய்வது வாகனங்கள் மற்றும் பாதசாரிகளின் இயக்கத்தைத் தடுக்கலாம், மேலும் ஃபயர் ஹைட்ராண்டுகளுக்கான (fire hydrant) அணுகலையும் தடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூட்டாட்சி போக்குவரத்து சட்டங்கள் பல்வேறு வகையான வாகன நிறுத்தம் தொடர்பான குற்றங்கள் மற்றும் அபராதங்களை பட்டியலிட்டுள்ளது. அவற்றில், சில கடுமையான குற்றங்களுக்கு அபராதத்துடன் சேர்த்து ஓட்டுநர் உரிமத்தில் கருப்பு புள்ளிகளும் (black points) வழங்கப்படுகின்றது. 

பார்க்கிங் அபராத பட்டியல்

>> தவறான பார்க்கிங்: 500 திர்ஹம் அபராதம்

>> நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களின் பின்னால் வாகனங்களை நிறுத்துதல் மற்றும் அவற்றின் இயக்கத்தை தடுப்பது: 500 திர்ஹம் அபராதம்

>> வாகனத்தை முறையாக பாதுகாக்காமல் பார்க்கிங் செய்தல்: 500 திர்ஹம் அபராதம்

>> நடைபாதையில் வாகனங்களை நிறுத்துதல்: 400 திர்ஹம் அபராதம்

>> பாதசாரிகளின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் வாகனத்தை நிறுத்துதல்: 400 திர்ஹம் அபராதம்

>> ஃபயர் ஹைட்ரண்ட்களுக்கு முன் வாகன நிறுத்தம் செய்தல்: 1,000 திர்ஹம் அபராதம், 6 ப்ளாக் பாய்ண்ட்ஸ்

>> மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் பார்க்கிங் செய்தல்: 1,000 திர்ஹம் அபராதம், 6 பிளாக் பாயிண்ட்ஸ்

>> காரணமின்றி சாலையின் நடுவில் நிறுத்தினால்: 1,000 திர்ஹம் அபராதம், 6 ப்ளாக் பாய்ண்ட்ஸ்

>> மஞ்சள் பெட்டி சந்திப்பில் (yellow box junction) நிறுத்துதல்: 500 திர்ஹம் அபராதம்

>> பொதுச் சாலைகளில் இடதுபுறச் சாலை ஓரங்களில் உள்ள தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனத்தை நிறுத்தினால்: 1,000 திர்ஹம் அபராதம்

Related Articles

Back to top button
error: Content is protected !!