அமீரக சட்டங்கள்

விசிட் விசா நீட்டிப்பை ரத்து செய்த துபாய்.. நாட்டை விட்டு வெளியேறுவது கட்டாயம்..!! உறுதி செய்த டிராவல் நிறுவனங்கள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விசிட் விசாவில் வரும் வெளிநாட்டவர்கள் தங்களின் விசா காலத்தை புதுப்பித்துக்கொள்ள விரும்பினால், அவர்கள் கட்டாயம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும், நாட்டிற்குள்ளே புதுப்பித்துக்கொள்ளும் நடைமுறை நிறுத்தப்படுவதாகவும் அமீரக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

அமீரகத்தில் விசா நீட்டிப்பிற்கு அமீரகத்தை விட்டு வெளியேறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அமீரகத்தை விட்டு வெளியேறாமல் தங்கள் அமீரக சுற்றுலா விசாவை துபாயில் மட்டும் புதுப்பித்துக் கொள்ளும் வசதி இருந்து வந்தது. அதாவது, ​​நாட்டிற்குள் விசா மாற்றம் துபாயில் மட்டும்  நடைமுறையில் இருந்து வந்த நிலையில் தற்பொழுது துபாயிலும் இந்த விசா நீட்டிப்பு நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டிராவல் ஏஜெண்ட் நிறுவனங்கள் தெரிவிக்கையில் துபாயில் வழங்கிய விசா உட்பட, அமீரகத்தின் விசிட் விசா வைத்திருப்பவர்கள் நாட்டிற்குள் இருந்து தங்கள் விசாவைப் புதுப்பிப்பதற்கான அனைத்து விருப்பங்களும் இப்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

இது குறித்து டிராவல் ஏஜென்ட் நிறுவனங்கள் கூறுகையில் “அமீரகத்தில் தங்கியிருக்கும் போது, தங்கள் விசாவின் நிலையை மாற்றுவதற்கு வேறு எந்த விருப்பமும் சுற்றுலாவாசிக்கு கிடையாது. விசாவை புதுப்பிக்க விரும்பும் நபர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டு திரும்ப வேண்டும்” என கூறியுள்ளன.

மேலும் கூறுகையில், “நாட்டிற்குள் இருந்து தங்கள் விசாவை நீட்டிக்க எண்ணி எங்களை அணுகிய பல குடும்பங்கள் மற்றும் வயதானவர்கள் உள்ளனர். இருப்பினும், அது சாத்தியமில்லை, அவர்கள் இப்போது நாட்டை விட்டு வெளியேறி புதிய விசிட் விசாவிற்கு விண்ணப்பித்த பிறகு திரும்ப வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளன.

இந்த நடைமுறையானது அமீரகத்தில் முன்பிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருவதாகும். ஆனால் கொரோனா தொற்றுநோய்களின் போது லாக்டவுன் காரணங்களால் ​​பயணம் கடினமாக இருந்ததனால், ​​ஐக்கிய அரபு அமீரகம் மனிதாபிமான அக்கறையின் காரணமாக விதிகளை மாற்றியமைத்திருந்தது.

இப்போது, ​​அனைத்து எல்லைகளும் திறக்கப்பட்டு, பயணம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால், முன்பு இருந்தது போல  விதிமுறைகளை மாற்ற அரசாங்கம் முடிவு செய்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகளினால் அண்டை நாடுகளுக்கான விமானங்கள் மற்றும் பேருந்துகளுக்கான தேவை பெருமளவில் அதிகரித்துள்ளது என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து விசா நிலை மாற்றங்களுக்காக மக்கள் பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு பயணிக்கிறார்கள் எனவும் டிராவல் நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!