அமீரக செய்திகள்
அமீரகத்தில் நிலவும் மோசமான வானிலை.. குளோபல் வில்லேஜ் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிப்பு..!!

அமீரகத்தில் கடந்த சில தினங்களாகவே பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அமீரகத்தில் நிலவி வரும் இந்த நிலையற்ற வானிலை காரணமாக பல பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.
அதுமட்டுமல்லாமல் துபாயில் பெய்து வரும் கன மழையால் குறிப்பிட்ட சாலைகளில் நீர் தேங்கியதன் காரணமாக அந்த சாலைகள் மூடப்பட்டு மாற்று வழிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் துபாயில் பெய்து வரும் கன மழை காரணமாக புகழ்பெற்ற சுற்றுலா தலமான குளோபல் வில்லேஜ் இன்று (ஜனவரி 26, 2023) மூடப்பட்டிருக்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. துபாயில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், தொடர்ந்து இரண்டாவது நாளாக குளோபல் வில்லேஜ் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.