வளைகுடா செய்திகள்

சவூதிக்கு பயணிக்க டிக்கெட் இருந்தாலே போதும்.. விசா தேவையில்லை.. புதிய முயற்சியை துவங்கும் சவூதியா ஏர்லைன்ஸ்..

சவூதி அரேபியாவை சேர்ந்த விமான நிறுவன டிக்கெட்டை வைத்திருக்கும் பயணிகள் இனி இலவசமாக நான்கு நாட்களுக்கு சவூதியில் தங்கலாம் என்ற புதிய அறிவிப்பு ஒன்று தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவைச் சேர்ந்த விமான நிறுவனமான சவூதியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமான டிக்கெட்டை வைத்திருக்கும் பயணிகளுக்கு இலவசமாக விசா அளிக்கப்பட்டு அதிகபட்சம் நான்கு நாட்களுக்கு (அல்லது 96 மணிநேரம்) நாட்டிற்குள் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது பற்றி சவூதியாவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பயணிகள் ஆன்லைனில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, ​​​​அவர்களுக்கு 96 மணி நேரங்களுக்கான விசா தேவையா இல்லையா என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள் வேண்டும் என குறிப்பிட்டால், சில நடைமுறைகளை முடிக்க வேண்டியிருக்கும். அதற்குண்டான படிவத்தை நிரப்புமாறு கேட்கப்படும்” என கூறியுள்ளார்.

இவ்வாறு நாட்டில் தங்கும் பயணிகள் ஹஜ் மற்றும் உம்ரா செய்ய இந்த கால கட்டத்தில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த Etihad, Emirates, Fly Dubai, Air Arabia ஆகிய பல விமான நிறுவனங்களில் இந்த முறையானது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்பதும் இதன்படி இந்த விமான நிறுவன டிக்கெட்டுகளுடன் 48 முதல் 96 மணிநேரம் வரையிலான ட்ரான்சிட் விசாக்களை பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் வழங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!