அமீரக செய்திகள்

அபுதாபி: பிக் டிக்கெட் டிராவில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற தமிழர்..!! அப்போ ஒரு கிலோ தங்கம்..!! இப்போ என்ன தெரியுமா..??

அபுதாபி பிக் டிக்கெட்டின் வாராந்திர டிராவில் (Big Ticket Draw) கத்தாரில் வசிக்கும் தமிழர் ஒருவர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். சுமன் முத்தையா ராகவன் நாடார் என்ற நபர் வாராந்திர எலெக்ட்ரானிக் டிராவின் மூலம் கடந்த டிசம்பரில் 1 கிலோ தங்கத்தை ஏற்கெனவே வென்றிருக்கிறார். இந்நிலையில், இந்த மாதம் நடைபெற்ற டிரீம் கார் ரேஃபிள் டிராவில் (Dream Car raffle draw) ரேஞ்ச் ரோவர் காரை அவர் வென்று இரண்டாவது முறையாக பரிசை தட்டிச் சென்றுள்ளார்.

இந்த ரேஃபிள் டிரா குறித்து ராகவன் கூறுகையில் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக பிக் டிக்கெட்டுகளை வாங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தற்போது தனக்கு கிடைத்துள்ள ரேஞ்ச் ரோவரை விற்றுவிட்டு அதில் கிடைக்கும் பணத்தை தனது குடும்பத்திற்கு அனுப்பப் போவதாக பிக் டிக்கெட்டின் பிரதிநிதிகளிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல, கடந்த டிசம்பரில் நடைபெற்ற டிராவில் ஒரு கிலோ தங்கத்தை வென்ற போது அவர் அந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை என்றும், கிடைக்கும் ஒரு கிலோ தங்கத்தை தனது இரட்டை மகள்களின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யப்போவதாகவும் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இதில், தற்போது அவருக்கு அடுத்தடுத்து கிடைத்த அதிர்ஷ்டத்தினால், ஒரு நாள் பிக் டிக்கெட்டின் கிராண்ட் பரிசை வெல்லும் வாய்ப்பை அவருக்கு உருவாக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அதனால் இனி ஒவ்வொரு மாதமும் டிக்கெட் வாங்குவதைத் தொடரபோவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் நடைபெற்று வரும் பிக் டிக்கெட்டில் அடுத்த மாத குலுக்கலுக்கு டிக்கெட்டுகளை வாங்க வேண்டுமெனில், பிப்ரவரி 28 வரை ஆன்லைனில் அல்லது அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் அய்ன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கடைகளில் உள்ள கவுண்டர்களைப் பார்வையிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பிக் டிக்கெட் வாங்கும் அனைவருமே தானகவே வாராந்திர எலெக்ட்ரானிக் டிராவில் நுழைந்து, ஒவ்வொரு வாரமும் 100,000 திர்ஹம்களை வெல்வதற்கான வாய்ப்பைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் மாதம் நடக்கவுள்ள பிக் டிக்கெட் டிராவில் முதல் பரிசாக 15 மில்லியன் திர்ஹம்களும், இரண்டாம் பரிசாக 1 மில்லியன் திர்ஹம்களும், மூன்றாம் பரிசாக 100,000 திர்ஹம்கள் மற்றும் நான்காவது பரிசாக 50,000 திர்ஹம்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!