அமீரக செய்திகள்
அமீரகத்தின் பல பகுதிகளில் மூடுபனிக்கு வாய்ப்பு!! அபுதாபி காவல்துறை எச்சரிக்கை!!
அமீரகத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கடுமையான பனிமூட்டம் நிலவியது. குறிப்பாக அபுதாபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அருகில் இருக்கும் எவற்றையும் காண முடியாத அளவிற்கு பனிப்போர்வையால் மூடப்பட்டது போல் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.இதன் காரணமாக விபத்துகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் விதமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு அபுதாபி காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.