அமீரக செய்திகள்

UAE: சாலையில் சட்டென்று பாதையை மாற்றும் வாகன ஓட்டிகளுக்கு 400 திர்ஹம்ஸ் அபராதம்!! காவல்துறை வெளியிட்டுள்ள வீடியோ…

வாகன ஓட்டிகளுக்கு தொடர்ச்சியாக பல்வேறு அறிவிப்புகளையும் எச்சரிக்கைப் பதிவுகளையும் வெளியிட்டு வரும் அபுதாபி காவல்துறை, தற்போது மீண்டும் ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளது. வெளியான வீடியோ காட்சிகளின்படி, சாலைகளின் இன்டெர்செக்சனில் பாதைகளைத் தேர்வு செய்யும் போது வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும் மிகப்பெரிய சாலைகளில் உள்ள இன்டெர்செக்சனில் வாகனத்தை திருப்ப முயற்சிக்கும்போது, சாலையின் இடது அல்லது வலது பாதையில் வாகனத்தை ஓட்டிச் செல்ல வேண்டும் என்பதை காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், இது போன்ற சாலை இன்டெர்செக்சனில் வாகனங்களை ஒரு பாதையில் இருந்து மற்றொரு பாதைக்கு மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விளக்குகள் மற்றும் பலகைகள் மற்றும் வீதியில் காணப்படும் அம்புகுறிகள் போன்றவற்றின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாகனத்தை செலுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், இது போன்ற போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டுபிடிக்க ரேடார் அமைப்புகள் இருப்பதாகவும், விதிகளை மீறுபவர்களுக்கு சுமார் 400 திர்ஹம்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, போக்குவரத்து விதிகளைக் கடைபிடிப்பது விபத்துக்களைத் தவிர்ப்பதுடன் சாலையில் செல்லும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!