அமீரக செய்திகள்

அமீரக ஜனாதிபதி, பிரதமர் உருவங்களை கொண்ட புதிய தங்க நாணயங்கள் அமீரகத்தில் வெளியீடு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர்களின் படங்கள் அச்சிடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களின் புதிய சீரிஸை துபாயின் மல்டி கமாடிட்டிஸ் சென்டர் (Dubai Multi Commodities Centre – DMCC) சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் அமீரகத்தின் சாதனைகளைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட நாணயங்கள் பற்றிய கூடுதல் விவரங்களையும் DMCC வெளியிட்டுள்ளது. ரமலான் மாதத்திற்குப் பிறகு இந்த நாணயங்கள் வாங்குவதற்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றியைக் குறிக்கும் வகையில், புதிய முன்மாதிரி பொன் நாணயங்களில் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் துணைத் தலைவரும் பிரதமருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஆகியோரின் உருவங்கள் உட்பட பல்வேறு வடிவமைப்புகள் உள்ளன. அத்துடன் ஒரு முக்கிய உலகளாவிய கலாச்சார இடமாக நாட்டின் நிலைப்பாட்டைக் குறிக்கும் வகையில் மற்றொரு பதிப்பு louvre abudhabi-யின் படத்தைக் கொண்டுள்ளது.

புதிய முன்மாதிரி நாணயங்களின் வெளியீடு, செக் குடியரசின் மத்திய வங்கிக்கு (Czech Republic’s central bank) நாணயங்களை வழங்கும் அதிகாரப்பூர்வ சப்ளையரான Czech Mint உடன் கூட்டு சேர்ந்ததன் விளைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் துபாய் தங்க நாணயங்கள் ஒப்பந்தத்தில் DMCC இன் செயல் தலைவர் மற்றும் CEO அகமது பின் சுலேயம் கையெழுத்திட்டுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!