அமீரக செய்திகள்

ரமலான் 2023: அமீரகத்தில் எங்கெல்லாம் இஃப்தார் கனான் ஃபயரிங் நிகழ்த்தப்படும்..??

ரமலான் மாதத்தில் நிகழ்த்தப்படும் கனான் ஃபயரிங் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் பார்த்து ரசிக்கும் ஒரு பாரம்பரியமாக உள்ளது. ரமலான் மாதத்தின் போது, நாட்டின் பல எமிரேட்டுகளில் இந்த இஃப்தார் கனான் ஃபயரிங் நிகழ்த்தப்படும்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் அமீரகத்தில் இந்த ரமலான் மாதத்திற்கான கனான் ஃபயரிங் (cannon firing) நிகழ்த்தப்படும் இருப்பிடங்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாதத்தில் கனான் ஃபயரிங் நோன்பு நேரத்தின் முடிவையும், மஹ்ரிப் தொழுகைக்கான அழைப்புடன் இஃப்தார் நேரத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. இந்த வருட ரமலானின் போது துபாய், அபுதாபி, அல் அய்ன், அல் தஃப்ரா, ராஸ் அல் கைமா மற்றும் உம் அல் குவைன் ஆகிய இடங்களில் கனான் ஃபயரிங் நிகழ்த்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

துபாயில், இந்த கனான் ஃபயரிங் எக்ஸ்போ சிட்டி துபாயில் (அல் வாஸ்ல் பிளாசாவிற்கு முன்னால்), புர்ஜ் கலீஃபா, துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி, மதினத் ஜுமேரா, தமாக் மற்றும் ஹத்தா கெஸ்ட் ஹவுஸிற்கு அருகில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியை பொறுத்தவரை ஷேக் சயீத் மசூதி, கஸ்ர் அல்-ஹோஸ்ன் மற்றும் முஷ்ரிஃப் பகுதியில் உள்ள உம் அல்-எமரத் பூங்காவிலும், ஷஹாமா நகரில் ஃபார்முலா பார்க்கிங்கிலும், அல்-அய்ன் நகரத்தில் ஜாகர் பகுதியில் திருமண மண்டபத்திற்கு அருகில் மற்றும் அல்-ஜாஹிலி கோட்டையிலும், அல்-தஃப்ரா பகுதியில் அட்னாக் கார்டனிலும் நிகழ்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஷார்ஜாவில் அல் மஜாஸ் வாட்டர்ஃப்ரண்ட், அல் தைத் ஃபோர்ட், கல்பா க்ளாக் டவர், கொர்ஃபக்கன் ஆம்பிதியேட்டர் ஆகிய இடங்களிலும் ராஸ் அல் கைமாவில் அல் கவாசிம் கார்னிச் பகுதியில் உள்ள கொடிக்கம்பத்திற்கு அருகிலும் மற்றும் உம் அல் குவைனில் ஷேக் சயீத் மசூதியிலும் நிகழ்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Back to top button
error: Content is protected !!