அமீரக செய்திகள்

துபாயின் அழகை கடல் வழியாக சுற்றிப்பார்க்க புதிய வழித்தடம்..!! பயண கட்டணம், செல்லும் வழி குறித்த தகவல்கள்..!!

அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நகரத்தின் அழகைச் சுற்றிப் பார்க்கும் பொருட்டு, துபாயில் புதிதாக ஒரு வழித்தடத்தில் தோ க்ரூஸ் (Dhow Cruise) பயணமானது சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள பொழுதுபோக்கு இடமான துபாய் கேனலில் (Dubai Canal) அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நீர்வழி சுற்றுலாவில் நகரத்தின் நவீன கட்டிடக்கலை அற்புதங்கள் மற்றும் வாட்டர்ஃபிரண்ட் சூழலை பார்வையாளர்கள் அனுபவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சுற்றுலா ஏற்பாட்டாளர் ஒருவர் கூறுகையில், இந்த தோ க்ரூஸ் பயணமானது பயணிகளை துபாய் க்ரீக்கை அரேபிய வளைகுடாவுடன் இணைக்கும் துபாய் வாட்டர் கேனல் வழியாக அழைத்துச் செல்லும். மேலும், இந்த தோவ் க்ரூஸானது தேரா க்ரீக் மற்றும் மெரினாவில் உள்ளதைப் போலவே, சிறப்புக் காட்சிகள், நவீன வசதிகள், வசதியான இருக்கைகள் மற்றும் ஆடம்பரமான அனுபவத்தை வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பயணம் மற்றும் அம்சங்கள்:

பயணிகள் தங்களது பயணத்தை துபாய் க்ரீக்கின் பலாஸ்ஸோ வெர்சேஸ் ஹோட்டலுக்குப் பின்னால் இருந்து தொடங்கினால், துபாய் வாட்டர் கேனல் வழியாக பயணிக்கும் இந்த க்ரூஸ் பிசினஸ் பே மற்றும் டவுன்டவுன் பகுதியில் உள்ள வானுயர் கட்டிடங்களின் பரந்த காட்சிகளையும், ராஸ் அல் கோர் பறவைகள் சரணாலயம் மற்றும் ஃபெஸ்டிவல் சிட்டி லைட் ஷோ போன்றவற்றின் காட்சிகளையும் வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த தோ க்ரூஸில் அரபு, ஆசிய மற்றும் ஐரோப்பிய உணவுகள் உட்பட பல சர்வதேச உணவு வகைகளை உள்ளடக்கிய அருமையான பஃபேயில் உண்டு மகிழ்வதோடு, ஒட்டுமொத்த சூழலையும் கலாச்சார அனுபவத்தையும் சேர்க்கும் விதமாக, பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் போன்ற சில நேரடி பொழுதுபோக்குகளையும் ரசித்து அனுபவிக்கலாம்.

பயணக் கட்டண விவரங்கள்:

  • துபாய் க்ரீக்: ஒரு நபருக்கு 35 திர்ஹம்களில் தொடங்குகிறது
  • அல் சீஃப்: ஒருவருக்கு 45 திர்ஹம்களில் தொடங்குகிறது
  • மெரினா: ஒரு நபருக்கு 80 திர்ஹம்களில் தொடங்குகிறது
  • துபாய் வாட்டர் கேனல்: ஒரு நபருக்கு 50 திர்ஹம்களில் தொடங்குகிறது

Related Articles

Back to top button
error: Content is protected !!