அமீரக செய்திகள்

UAE: உலகின் மிகவும் விரும்பப்படும் முதல் 10 இடங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள துபாய் புர்ஜ் கலீஃபா..!

துபாயின் புர்ஜ் கலீஃபா உலகின் மிகவும் விரும்பப்படும் முதல் 10 அடையாளங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. Usebounce.com இல் உள்ள பயண நிபுணர்களின் கூற்றுப்படி, உலகின் மிக உயரமான கட்டிடமக திகழும் புர்ஜ் கலீஃபா 16.73 மில்லியன் வருடாந்த பார்வையாளர்களுடன் உலகின் மிகவும் விரும்பக்கூடிய 8வது சிறந்த இடமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

புர்ஜ் கலீஃபா 24.59 மில்லியன் வருடாந்திர கூகுள் தேடல் தொகுதிகளையும் 6.239 மில்லியன் இன்ஸ்டாகிராம் இடுகைகளையும் பதிவு செய்துள்ளது. மேலும் உலகளவில் நயாகரா நீர்வீழ்ச்சி, இந்தியாவின் தாஜ்மஹால், கிராண்ட் கேன்யன், கோல்டன் கேட் பிரிட்ஜ், Statue of Liberty, சீனப் பெருஞ்சுவர், ஈபிள் டவர், புர்ஜ் கலீஃபா, Banff National Park மற்றும் கொலோசியம் ஆகியவை உலகில் அதிகம் விரும்பப்படும் முதல் 10 அடையாளங்களாகும்.

புர்ஜ் கலீஃபா நுழைவு விலை 135 திர்ஹம்ஸ் மற்றும் வருடத்திற்கு 17 மில்லியன் பார்வையாளர்களின் எண்ணிக்கையுடன் மிகப்பெரிய வருமானத்தை ஈட்டுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புர்ஜ் கலீஃபா டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் $621 மில்லியன் வருவாய் ஈட்டுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!