அமீரக செய்திகள்

துபாயில் முழுக்க முழுக்க பெண் ஊழியர்களால் இயங்கும் McDonald’s உணவகம் திறப்பு..!! Curbside ஆர்டர் வசதி உட்பட முக்கிய சிறப்பம்சங்கள் இருப்பதாகத் தகவல்…!!

இலக புகழ்பெற்ற McDonald அமீரகத்தில் அதன் 197வது உணவகத்தை துபாயில் திறந்துள்ளது. துபாயின் உம் சுகீம் 2 இல் அமைந்துள்ள இந்த புதிய உணவகம், முழுக்க முழுக்க பெண் ஊழியர்கள் மட்டுமே பணிபுரியும் இதன் முதல் உணவகமாகும். மேலும், இது 24 மணி நேரமும் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொடக்கம் WLNஇல் (McDonald’s Women Leadership Network) உள்ள பெண் குழு உறுப்பினர்களை ஆதரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து McDonald’s UAEயின் CEO வாலித் ஃபகிஹ் அவர்கள் பேசுகையில், உம் சுகீமில் புதிதாகத் துவங்கியுள்ள உணவகம் மூலம், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், வணிகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் சம வாய்ப்புகளை வழங்குவதிலும் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த உணவகம் பெண்களின் திறமையை மேம்படுத்துவதற்கான ஒரு பகுதியாக இருப்பதுடன் பெண்களின் உந்துதலையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, உணவகத்தில் பகுதியளவு சோலார் பேனல் கொண்ட ஆற்றல் மூலம் மற்றும் மின்சார வாகன சார்ஜிங் போர்ட்கள் என முக்கிய சிறப்பம்சங்கள் இருப்பதால், பசுமையான உலகிற்கும் இது பங்களிப்பதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்த புதிய அறிமுகத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவெனில், இங்கு வாடிக்கையாளர்கள் கர்ப்சைடு (curbside) ஆர்டரையும் பெறலாம். இதன் மூலம், வாடிக்கையாளர்களின் கூடுதல் வசதிக்காக நியமிக்கப்பட்ட பார்க்கிங் பகுதியில் இருந்து டிஜிட்டல் முறையில் ஆர்டர் செய்து உணவகத்திற்குள் நுழையாமலேயே தங்களின் ஆர்டரினை பெற்றுக்கொள்ள அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் அதன் ஆன்லைன் ஆப் வழியாகவும், நேரடியாக சென்றும் ஆர்டர் செய்து உண்ணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!