அமீரக செய்திகள்

UAE: 6 மாதங்களுக்கு இலவச டேட்டா.. குறைந்த கட்டணத்தில் சர்வதேச அழைப்புகள்..!! தொழிலாளர்களுக்காக புதிய “ஹாப்பினஸ் சிம் கார்டு” சேவை அறிமுகம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதன் முக்கியத்துவத்தை அறிந்து தொழிலாளர்களுக்கான மலிவு விலையில் புதிய ஹேப்பினஸ் சிம் கார்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) எமிரேட்ஸ் ஒருங்கிணைந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் (EITC) ஒரு பகுதியான du உடன் இணைந்து, பிரத்யேக சலுகைகளை வழங்கும் ஹேப்பினஸ் சிம் கார்டை அறிமுகம் செய்துள்ளது.

பிரத்யேக சலுகை என்னும் போது, 6 மாத இலவச டேட்டா மற்றும் குறைந்த கட்டணத்தில் சர்வதேச அழைப்புகள் போன்ற சலுகைகளை சிம் கார்டு வழங்குகிறது. மேலும், இந்த ஹேப்பினஸ் சிம் வைத்திருப்பவர்கள் MoHRE வழங்கும் முக்கியமான அறிவிப்புகளையும் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

சிம் கார்டை எப்படி பெறுவது?

உங்களது பணி ஒப்பந்தங்களை வழங்க அல்லது புதுப்பிப்பதற்கான MoHRE இன் ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தியோ அல்லது பிசினஸ் சர்வீஸ் சென்டர்கள் மற்றும் வழிகாட்டுதல் மையங்களுக்குச் சென்றோ சிம் கார்டைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுமுயற்சி நாட்டில் உள்ள ப்ளூ காலர் தொழிலாளர்களின் (blue collar workers) நலனை மேம்படுத்துவதற்கான MoHREஇன் நோக்கத்துடன் ஒத்துப்போவதாகவும், du உடனான இந்த கூட்டாண்மை மகிழ்ச்சி அளிப்பதாகவும் MoHRE இன் எமிரேடிசேஷன் விவகாரங்களுக்கான செயல் துணைச் செயலாளரும், தொழிலாளர் விவகாரங்களுக்கான துணைச் செயலாளருமான ஆயிஷா பெல்ஹார்ஃபியா என்பவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிம் கார்டின் சலுகைகள் குறித்துப் பேசிய அவர், தொழிலாளர்களுக்கு மலிவு மற்றும் நம்பகமான இணைப்பை வழங்குவதன் மூலம், அவர்களின் அன்புக்குரியவர்களுடன் தொலைத்தொடர்பில் மகிழ்ந்திருக்க அத்தியாவசிய சேவைகளை அணுகவும் நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம் என்று கூறியுள்ளார்.

அதேபோல், Du நிறுவனத்தின் CEO ஃபஹத் அல் ஹஸ்ஸவி அவர்கள் கூறுகையில், அமீரகத்தில் உள்ள தொழிலாளர்கள், குறிப்பாக ப்ளூ காலர் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்பில் இருப்பதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு, ஹேப்பினஸ் சிம் கார்டை வழங்குவதன் மூலம், அவர்களுக்கு சலுகைகள் நிறைந்த தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, அமீரகத்திற்கு வரும் புதிய ப்ளூ காலர் தொழிலாளர்களை வரவேற்கவும், எங்களின் தற்போதைய வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் மலிவு விலையில் சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!