அமீரக செய்திகள்

துபாயின் அல் முல்லா பிளாசாவின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு பேருக்கு காயம்..!! மாலை மூடிய அதிகாரிகள்….

துபாயில் உள்ள அல் முல்லா பிளாசா கட்டிடத்தின் ஒரு சிறிய பகுதி நேற்று (சனிக்கிழமை) இரவு இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் காயமடைந்ததாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது. இது அல் நஹ்தா 1 இல் அல் கியாஹ்தா மெட்ரோ நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

துபாய் எமிரேட்டின் பழமையான இந்த மாலில் உள்ள உபகரணங்கள் சேமித்து வைக்கும் இடத்தில் அதிக சுமை ஏற்றியதால் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். அதிக எடையுள்ள பொருட்களை முறையற்ற முறையில் சேமித்து வைத்ததால் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் இரண்டு பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும், கட்டிடத்தில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்ததாகவும் துபாய் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அல் முல்லா பிளாசாவில் ஏற்பட்ட இந்த விபத்தைத் தொடர்ந்து அந்த கட்டிடத்தில் இயங்கி வந்த ஷாப்பிங் கடைகள் தற்போது அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, ஜனவரி 2022 இல், துபாய் மெரினா டவரின் கார் பார்க்கிங் கூரை இடிந்து விழுந்தது. அப்போது, நள்ளிரவு 1 மணியளவில் டோரா பே டவருக்கு காவல்துறை மற்றும் குடிமைத் தற்காப்புப் பிரிவினர் வரவழைக்கப்பட்டு மேற்கொண்ட நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டது.

இதேபோல், ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மொத்தம் 2,551 மீட்பு சம்பவங்களுக்கு பதிலளித்ததாக அதிகாரம் கூறியுள்ளது, இது கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 3,845 சம்பவங்களை விட குறைவானது. போக்குவரத்து விபத்துக்கள், தீ விபத்துகள், கார்கள், குடியிருப்புகள் மற்றும் லிஃப்ட்களில் இருந்து மீட்பு மற்றும் வெளிநாடுகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் ஆகியவை இதில் அடங்கும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள். Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!