அமீரக செய்திகள்

UAEக்கு புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தையுடன் பயணிக்கலாமா?? விமான நிறுவனங்களின் நிபந்தனைகள் என்ன..??

நீங்கள் புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தையுடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்கத் திட்டமிட்டிருக்கிறீர்களா? அமீரகத்தை தளமாகக் கொண்ட Etihad, Emirates, flydubai மற்றும் Air Arabia ஆகிய விமான நிறுவனங்களில் குழந்தைகளுடன் பயணம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளன.

அதுமட்டுமில்லாமல், பெரும்பாலான விமான நிறுவனங்கள் புதிய பெற்றோருக்கு ஸ்ட்ரோலர்கள், தள்ளுபடி டிக்கெட் கட்டணங்கள், பாசினெட்டுகள் (bassinet) மற்றும் முன்னுரிமை போர்டிங் போன்ற சிறப்புச் சேவைகளை வழங்குகின்றன.

UAE-ஐ தளமாகக் கொண்ட விமான நிறுவனங்களில் குழந்தைகளுடன் பயணம் செய்வதற்கான தேவைகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான நிறுவனங்கள் குழந்தைகளுக்கான குறிப்பிட்ட வயது வகைப்பாடுகளைக் கொண்டுள்ளன.

எமிரேட்ஸ்

http://emirates.com – இணையத்தளத்தின்படி, இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் எமிரேட்ஸ் விமானங்களில் குழந்தை பயணிகள் பிரிவின் கீழ் வருகிறார்கள்.

கைக்குழந்தைகள் பெற்றோரின் மடியில் பயணம் செய்யலாம் மற்றும் ஒரு சிறப்பு சீட் பெல்ட் அல்லது பாசினெட் மூலம் பாதுகாக்கப்படுகின்றன, ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது பாசினெட்டுக்கு கோரலாம்.

எமிரேட்ஸ் ஏர்லைன் படி, ஏழு நாட்களுக்குக் குறைவான குழந்தைகள், அவசரகாலப் பயணம், மருத்துவக் காரணங்களுக்காக (இன்குபேட்டர்களில்) அல்லது கருணை அடிப்படையில் தாய் பயணம் செய்தால் விமானத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

எதிஹாட்

Etihad Airways இன் இணையதளத்தின்படி, பின்வரும் குழந்தை பிரிவினர் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

  • பிறந்து ஏழு நாட்களை கடந்த குழந்தை.
  • சிக்கல்கள் இல்லாமல் பிறந்த குழந்தை.
  • குறை பிரசவத்தில் பிறக்காத குழந்தை.

குழந்தை குறைபிரசவத்தில் பிறந்திருந்தால் அல்லது சிக்கல்களுடன் இருந்தால், பெற்றோர்கள் மருத்துவ தகவல் படிவம் (MEDIF) மற்றும் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கு தங்களுடைய சொந்த இருக்கை தேவையில்லை மற்றும் விமானத்தில் பெற்றோரின் மடியில் அமரலாம், சிறப்பு சீட் பெல்ட் மூலம் பாதுகாக்கப்பாக பயணிக்கலாம்.

மேலும், ஆன்லைனில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது நீங்கள் ஒரு பாசினெட்டையும் கோரலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அவை இலவசம்.

ஃப்ளைதுபாய்

flydubai.com இணையதளத்தின் படி, பெற்றோர் பிறந்து ஏழு நாட்கள் கடந்த குழந்தையுடன் பயணம் செய்யலாம்.

ஏர் அரேபியா

இந்த விமான நிறுவனத்தில் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் விமான நிறுவனத்தால் குழந்தைப் பயணிகளாக வகைப்படுத்தப்படுகிறார்கள், ஆனால் விமான நிறுவனத்தின் இணையதளத்தின்படி, எந்த சூழ்நிலையிலும் பிறந்து இரண்டு நாட்களுக்கும் குறைவான குழந்தைகளை விமான நிறுவனம் பயணிக்க அனுமதிக்காது.

நிபந்தனைகள்:

  • இரண்டு நாட்களுக்குக் குறைவான வயது – எந்த சூழ்நிலையிலும் குழந்தை ஏற்றுக்கொள்ளப்படாது.
  • மூன்றாம் நாள் முதல் ஆறாம் நாள் வரை – பிறந்த குழந்தைகளுக்கான ‘ஃபிட் டு ஃப்ளை (fit to fly)’ சான்றிதழ் அல்லது பெற்றோரின் கையொப்பமிட்ட இழப்பீட்டுப் படிவம் (indemnity form) இருந்தால் மட்டுமே குழந்தை பயணம் செய்ய அனுமதிக்கப்படும்.
  • ஏழு நாட்கள் அல்லது அதற்கு மேல் குழந்தை எந்த தடையுமின்றி பயணத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அமீரக விமானத்தில் குழந்தை தனியாக பயணிக்க முடியுமா?

நீங்கள் ஐந்து முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தையின் பெற்றோராக இருந்தால், அவர்கள் நீங்கள் இல்லாமல் பயணம் செய்ய விரும்பினால், அமீரகத்தை தளமாகக் கொண்ட விமான நிறுவனங்களான Etihad, Emirates, flydubai மற்றும் Air Arabia ஆகியவற்றிலிருந்து ‘அன்காம்பனிட் மைனர்ஸ் (Unaccompanied Minors)’ சேவையை நீங்கள் கோரலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!