அமீரக செய்திகள்

துபாயை போன்று அபுதாபியிலும் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ள சாலைகள்!! திருத்தப்பட்ட வேகவரம்புகளை வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை …

அபுதாபியில் உள்ள பல சாலைகள் இப்போது திருத்தப்பட்ட வேக வரம்புகளை தெளிவாக எடுத்துரைக்கும் வகையில், சிவப்பு நிறத்தில் சாலை அடையாளங்களுடன் குறிக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் மாற்றப்பட்ட வேக வரம்புகளை எடுத்துக்காட்டவும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அபுதாபி சிட்டி முனிசிபாலிட்டி நகரின் முக்கிய சாலைகளில் நடைபாதையை சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தியுள்ளது.

வெவ்வேறு சாலைகளில் மாற்றப்பட்டுள்ள வேக வரம்புகளை வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்துவதும், போக்குவரத்து ஓட்டம் மற்றும் அனைத்து சாலை பயனர்களின் பாதுகாப்பையும் மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

மாற்றியமைக்கப்பட்டுள்ள வேக வரம்புகள்:

அபுதாபியில் திருத்தப்பட்ட வேக வரம்புகளை சிறப்பித்துக் காட்டும் புதிய நடைபாதையைக் குறிக்கும் சில முக்கிய சாலைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  • அபுதாபி — அல் அய்ன் சாலை (E-22), அபுதாபியின் திசையில் உள்ள சாஸ் அல் நக்ல் பகுதியில், மணிக்கு 120 கிமீ  வரம்பில் இருந்து 100 கிமீ வேகமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஸ்ட்ரீட் (E-22). 311) பனியாஸ் திசையில் உள்ள ஸ்வீஹான் பிரிட்ஜ் சந்திப்பு மணிக்கு 140 கிமீ-இல் இருந்து 120 கிமீ வரை வேகக் குறைப்பைக் காட்டுகிறது.
  • ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஸ்ட்ரீட் (E-311) பனியாஸ் சிமிட்டரி, பனியாஸ் திசையில் மணிக்கு 120 கிமீ-இல் இருந்து 100 கிமீ வேகம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
  • ஷேக் சையத் பின் சுல்தான் தெரு (E-10) அபுதாபி நோக்கி ஷேக் சையத் பிரிட்ஜில் வேகவரம்பு மணிக்கு 120கிமீல் இருந்து 100கிமீ ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • ஷேக் கலீஃபா பின் சையத் சாலை (E-12) ஜுபைல் தீவுக்கும் சாதியத்துக்கும் இடையே அபுதாபியை நோக்கி, மணிக்கு 140 கிமீ முதல் 120 கிமீ வேகம் குறைவதைக் குறிக்கிறது.
  • அபுதாபியை நோக்கி ஷேக் கலீஃபா பின் சயீத் சாலை (E-12) சாதியத் தீவு, மணிக்கு 120கிமீல் இருந்து 100கிமீ ஆக வேகம் குறைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!