அமீரக சட்டங்கள்அமீரக செய்திகள்

விசிட் விசாவில் அமீரகம் வருபவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!! எச்சரிக்கை விடுக்கும் பயண முகவர்கள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் விசிட் விசாவில் வருபவர்கள் தங்களின் விசா செல்லுபடி காலம் முடிந்தும் நாட்டில் தொடர்ந்து தங்கினால் absconding என்று சொல்லக்கூடிய தலைமறைவு வழக்கு பதிவு செய்யப்படும் என்பது சட்ட விதிமுறையாகும். அதாவது விசிட் விசாவில் வந்த ஒரு நபர் தனக்கு விசா செல்லுபடி காலம் முடியும் தருவாயில் இருந்தால் அமீரகத்தை விட்டு வெளியேற வேண்டும் அல்லது அமீரகத்தில் தொடர்ந்து தங்க விரும்பினால் விசாவினை நீட்டிக்க வேண்டும். இவை இரண்டும் செய்யாமல் தொடர்ந்து அமீரகத்திலேயே தங்கும் பட்சத்தில் அவர்கள் மீது தலைமறைவு வழக்கு பதிவு செய்யப்படும் என பயண முகவர்கள் உறுதி தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாக, ​​டிராவல் நிறுவனங்கள் இவ்வாறு செல்லுபடி காலத்தையும் தாண்டி அமீரகத்தில் தங்கும் விசிட்டர்களுக்கு எதிராக தலைமறைவு வழக்குகளை பதிவு செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனினும் ஒரு சிலர் இது குறித்த முறையான விழிப்புணர்வு இல்லாததால் நிதிச்சுமை மற்றும் பயணத்தடை போன்ற பெரும் சிக்கல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே,  ஓவர்ஸ்டே (overstay) என்று சொல்லக்கூடிய விசா காலம் முடிந்தும் அமீரகத்தில் தங்குவது தொடர்பான சட்ட விதிகள் குறித்த விளக்கங்களை கீழே காணலாம்.

1. எனது விசிட் விசாவில் செல்லுபடியாகும் தேதியை நான் கடந்தால் என்ன நடக்கும்?  

விசாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதிக்கு 5 நாட்களுக்கு மேல் நீங்கள் தங்கினால், உங்கள் மீது ஒரு தலைமறைவு வழக்கு (absconding case) விதிக்கப்படலாம், இது ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமின்றி மற்ற வளைகுடா நாடுகளிலும் நுழைவதிலிருந்து உங்களை தடுப்புப்பட்டியலில் சேர்க்கும் என்று அமீரகத்தில் உள்ள டிராவல் நிறுவனங்கள் கூறுகின்றன.

2. அதிக காலம் தங்கியதற்கான அபராதம் எவ்வளவு?

பயணத் துறையில் உள்ள வல்லுநர்கள், குறைந்தபட்சம் தலைமறைவிற்கான அபராதம் 2,000 திர்ஹம்ஸ் செலுத்த வேண்டும் என்றும், இது ஒவ்வொரு நாளும் அதிகரிக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

3. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து எனது விசிட் விசாவை நீட்டிக்க முடியுமா?

உங்கள் விசிட் விசாவின் செல்லுபடியை நாட்டிற்குள் நீட்டிக்க முடியாது. இதைச் செய்ய, நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியேறி, புதிய விசிட் விசாவில் மீண்டும் நுழைய வேண்டும். இதற்காக அமீரகத்தின் அண்டை நாடான ஓமானிற்கு சென்று திரும்பி வருவது விசிட் விசாவை நீட்டிக்க பலரும் மேற்கொண்டு வரும் பொதுவான ஒரு நடைமுறையாகும்.

4. நான் தலைமறைவானதாக குற்றம் சாட்டப்பட்டால் நான் அபராதம் செலுத்த வேண்டுமா?

தலைமறைவானதாக குற்றச்சாட்டப்பட்டால் அதனை விடுவிக்க நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

5. நான் அபராதம் செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்?

ஐக்கிய அரபு அமீரகத்தில் தலைமறைவு ஒரு கிரிமினல் குற்றமாகும், மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல்துறை கைது செய்யலாம் என்று பயண முகவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தக் குற்றத்தின் கீழ் நீங்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தால், உங்கள் விசாவை வழங்கிய டிராவல் ஏஜென்ட் அல்லது உங்கள் ஸ்பான்சரிடம் இதனை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும். அபராதம் செலுத்தினால் மட்டுமே வழக்கு வாபஸ் பெறப்படும். அபராதம் செலுத்தப்படாவிட்டால் விமான நிலையத்திலேயே நிறுத்திவைத்து நாடு கடத்துவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

6. பயண முகவர்கள் ஏன் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எதிராக தலைமறைவு வழக்குகளை பதிவு செய்கிறார்கள்?

விசிட் அல்லது சுற்றுலாவில் டிராவல் ஏஜென்ஸி மூலம் வரும் நபர்களுக்கு அந்த டிராவல் ஏஜென்ஸியே ஸ்பான்சர் ஆகும். சுற்றுலா பயணிகள் அதிக நேரம் தங்கினால், ஏஜென்சி சிக்கலில் சிக்கி நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஏனென்றால், அதிக காலம் தங்கியிருக்கும் அபராதங்கள் ஏஜென்சிக்கு விதிக்கப்படும், பின்னர் டிராவல் ஏஜென்ட் உரிய நபரிடமிருந்து பணத்தைப் பெறுகிறார்.

தலைமறைவுக் கட்டணங்கள் காரணமாக விசா விண்ணப்ப போர்ட்டல்கள் தடுக்கப்படும்போது ஏஜென்சிகளுக்கும் இது தொந்தரவாக உள்ளது. ஒரு முகவர் கூறுகையில், அபராதம் செலுத்துவதோடு, அதிக நேரம் தங்கியிருக்கும் நபர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான அவுட்பாஸையும் டிராவல் நிறுவனம் செலுத்த வேண்டும், இது அவர்களுக்கு தேவையற்ற செலவிற்கு வழிவகுக்கிறது.

இதன் காரணமாகவே அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மற்ற விருப்பத்தை தேர்வு செய்கிறார்கள், அதாவது அதிக காலம் தங்கியிருப்பவர்களுக்கு எதிராக தலைமறைவு வழக்குகளை பதிவு செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இது ஏஜென்சிகளுக்கு விதிமீறல்களைத் தடுக்க உதவுகிறது என்றும் பயண முகவர்கள் கூறியுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!