அமீரக செய்திகள்

அல் அய்னில் இன்று முதல் கடுமையாக்கப்படும் பொது பார்க்கிங் விதிமுறைகள்.. விதிமீறல் புரிந்தால் உடனடியாக வாகனம் பறிமுதல்..!!

அபுதாபியில் இருக்கக்கூடிய அல் அய்னில் பார்க்கிங் விதிகளை மீறும் வாகனங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையானது இனி கடுமையாக்கப்படும் என அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அபுதாபி மொபிலிட்டி (AD மொபிலிட்டி) பிரதிநிதித்துவப்படுத்தும் முனிசிபாலிட்டிகள் மற்றும் போக்குவரத்துத் துறை (DMT), இன்று (ஜூன் 19 புதன்கிழமை) முதல் அல் அய்ன் நகரில் பொது பார்க்கிங் விதிகளை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் (vehicle towing service) என தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது மவாகிஃப் (mawakif) ஒழுங்குமுறை சட்டத்தின் அமலாக்கத்தின் ஒரு பகுதியாகும் என்றும், இது எமிரேட்டில் பொது பார்க்கிங் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கும் நகரத்தின் பகுதிகளில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வாகனங்களை இழுத்துச் செல்லும் செயல்முறை மீறலின் வகைக்கு ஏற்ப இருக்கும் என்பதை AD மொபிலிட்டி உறுதிப்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் பார்க்கிங் பகுதியில் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த வாகனம் உடனடியாக அல் அய்ன் இண்டஸ்ட்ரியல் சிட்டியில் உள்ள பறிமுதல் கட்டடத்திற்கு இழுத்துச் செல்லப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் வாகனங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்படாலோ அல்லது வணிக, விளம்பரம் அல்லது ப்ரோமோஷன் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டாலோ, அத்துடன் பார்க்கிங் அனுமதியின்றி அல்லது காலாவதியான பார்க்கிங் அனுமதியுடன் பார்க் செய்யப்பட்டிருந்தாலோ வாகனம் பறிமுதல் செல்லப்படும் என்றும் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆகவே, இத்தகைய பார்க்கிங் மீறல்களால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதைத் தவிர்க்க பார்க்கிங் விதிகளைக் கடைப்பிடிக்குமாறு AD மொபிலிட்டி அல் அய்னில் உள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், தடை செய்யப்பட்ட இடங்களில் அல்லது வாகனங்களின் இயக்கத்திற்கு இடையூறு விளைவிக்காமல், வாகனங்களை நிறுத்துவதற்கு நியமிக்கப்பட்ட இடங்களில் சரியாகவும் ஒழுங்காகவும் நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி, எப்பொழுதும் பொது பார்க்கிங்கை ஒழுங்கமைத்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பான சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் அது குறிப்பிட்டுள்ளது.

அதேசமயம், வணிக உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே மவாக்கிஃப் சேவைகள், அவற்றின் செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் போக்குவரத்து ஓட்டம், சேவைத் துறைகள், சமூக நல்வாழ்வு, பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலில் அவற்றின் நேர்மறையான விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் AD மொபிலிட்டி தொடங்கியுள்ளது.

அல் அய்னில் போக்குவரத்து அபராதங்களை சரிபார்ப்பது எப்படி?

போக்குவரத்து அபராதங்களைக் கண்காணிப்பது பொறுப்பான வாகனம் ஓட்டுவதற்கான இன்றியமையாத அம்சமாகும். இந்த செயல்முறையை குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு வசதியாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்ற அதிகாரிகள் பல்வேறு முறைகளை செயல்படுத்தியுள்ளனர்.

அந்த வகையில், நீங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளைப் பயன்படுத்தி, அல் அய்னில் போக்குவரத்து அபராதங்களை எவ்வாறு சரிபார்க்கலாம். இந்த முறைகள் வாடகை கார்களையும் உள்ளடக்கும்: அல் அய்னில் உள்ள போக்குவரத்து காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, போக்குவரத்து அபராதம் தொடர்பான பிரத்யேகப் பிரிவைத் தேடுங்கள். இது பொதுவாக “Traffic Violations” என்று பெயரிடப்படுகிறது.

உங்கள் வாகன விவரங்களைத் துல்லியமாக உள்ளிட்டதும்,  உங்கள் வாகனத்துடன் தொடர்புடைய அபராதங்கள் ஏதேனும் நிலுவையில் இருந்தால், கணினி திரையில் காண்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!