சூப்பரான ஆஃபர்களில் பொருட்களை அள்ளித்தர வந்தாச்சு “துபாய் சம்மர் சர்ப்ரைசஸ்-2024”..!! பல்வேறு பிராண்டுகளின் தயாரிப்புகளும் அசத்தலான ஆஃபரில் விற்பனை….

ஒவ்வொரு வருடமும் கோடை காலங்களில் துபாய் குடியிருப்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் (Dubai Summer Surprise – DSS)’ இந்தாண்டு அதன் 27வது பதிப்பில் அதிரடி விற்பனை மற்றும் மெகா பொழுதுபோக்கு சலுகைகளுடன் அடியெடுத்து வைக்க உள்ளது. சுமார் 65 நாட்கள் கண்கவர் வானவேடிக்கை மற்றும் அதிரடி தள்ளுபடிகளுடன் களைகட்டும் DSSஐ துபாய் ஃபெஸ்டிவல்ஸ் மற்றும் ரீடெயில் எஸ்டாப்ளிஷ்மென்ட் (DFRE) நிறுவனம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வருகிறது.
அதன்படி, இந்தாண்டிற்கான அதன் 27வது பதிப்பு எதிர்வரும் ஜூன் 28 அன்று, தொடங்கி செப்டம்பர் 1 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டு, குடியிருப்பாளர்களையும் பார்வையாளர்களையும் பிரமிக்க வைக்கும் உற்சாகமான ஷாப்பிங் ஃபெஸ்டிவல், மெகா விற்பனை சலுகை, பொழுதுபோக்கு மற்றும் உணவுப் பிரியர்களைக் கவர்ந்திழுக்கும் பல்வகை உணவுகள் போன்ற அளவில்லா கொண்டாட்டத்திற்கு DSS உறுதியளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
DFRE வெளியிட்ட அறிவிப்பின் படி, தினசரி புதுப்புது ஆச்சரியங்களுடன் வணிக வளாகங்கள், தீம் பார்க் மற்றும் முக்கிய பொழுது போக்கு இடங்கள், ஹோட்டல் ப்ரொமோஷன் என மக்களை வசீகரிக்கும் புதிய அனுபவங்களுடன் வேடிக்கை நிறைந்த கோடைகாலத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக எப்போதும் போல, நகரின் விருப்பமான இந்த கோடை நிகழ்வானது, ஷாப்பிங் செய்பவர்களுக்கு கண்கவர் ராஃபிள்கள் மற்றும் போட்டிகளில் கிராண்ட் பரிசுகளை வெல்வதற்கான எண்ணற்ற வாய்ப்புகளையும் கொண்டு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் DSS விற்பனையானது நகரம் முழுவதும் உள்ள சிறந்த பிராண்டுகளில் சிறந்த தள்ளுபடிகளை கொண்டு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, ஷாப்பிங் ஆர்வலர்கள் கோடை முழுவதும் தங்களுக்குப் பிடித்தமான ஃபேஷன், அழகு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டுகள் அனைத்திலும் சூப்பரான டீல்கள் மற்றும் குறைந்த விலைகளில் ஷாப்பிங் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel