அமீரக செய்திகள்

சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களுக்கு புதிய விதியை அறிவித்த அபுதாபி.. ஜூலை 1 முதல் அமல்.. மீறினால் அபராதம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் உரிமம் இல்லாமல் விளம்பரம் மற்றும் விளம்பர சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத் துறை (Abu Dhabi Department of Economic Development -ADDED) அறிவித்துள்ளது.

அதேசமயம், இ-ப்ளாட்ஃபார்ம்கள் வழியாக விளம்பரச் சேவைகளில் ஈடுபடும் அரசு நிறுவனங்களுக்கும் இந்த முடிவு பொருந்தும் என்றும், இன்ஃப்ளூயன்சர்கள் நேஷனல் மீடியா கவுன்சிலிடமிருந்து (National Media Council) அனுமதி பெற்றிருந்தாலும் உரிமம் பெறுவது அவசியம் என்றும் ADDED தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, Tamm தளத்தில் பொருளாதார மேம்பாட்டு சேவைகள் துறையை அணுகுவதன் மூலமும், இ-ப்ளாட்ஃபார்ம்களில் விளம்பரச் சேவைகள் உட்பட, அவர்கள் ஈடுபட விரும்பும் செயல்பாடுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் இதற்கான உரிமங்களை எளிதாகப் பெறலாம் என்று அதிகாரம் தெரிவித்துள்ளது.

அதிகாரம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தனிநபர்களுக்கான 1,250 திர்ஹம்ஸ் மற்றும் நிறுவனங்களுக்கு 5,000 திர்ஹம்ஸ் உரிமக் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு உரிமம் பெறத் தவறினால் 10,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன், இது நிறுவனங்களை மூடுவதற்கு கூட வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டிற்கு வெளியில் இருந்து வரும் வெளிநாட்டினர் எமிரேட்ஸ் ஐடி கார்டு அல்லது ஒருங்கிணைந்த எண்ணை (unified number) வைத்திருந்தால் இதற்கான உரிமம் பெறலாம் என்றும் ADDED தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம், ​​இ-ப்ளாட்ஃபார்ம்கள் மற்றும் சமூக ஊடகங்களில் 543 உரிமம் பெற்றவர்கள் விளம்பரச் சேவைகளைப் பயிற்சி செய்து வருவதாகவும், இந்த முடிவு நடைமுறைக்கு வந்த பிறகு இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரம் கூறியுள்ளது.

முன்னதாக, அபுதாபி எமிரேட்டில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற வணிகங்களும், அமீரகத்தில் செயல்படும் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களுடன் கூட்டாண்மை தொடர்பான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!