அமீரக செய்திகள்

துபாய்: ஈத் அல் அதா விடுமுறையில் மட்டும் பொது போக்குவரத்தை பயன்படுத்திய 6.7 மில்லியன் பயணிகள்..!! RTA வெளியிட்ட தகவல்..!!

துபாயில் ஈத் அல் அதா பண்டிகையை முன்னிட்டு ஜூன் 15 முதல் 18 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நான்கு நாள் விடுமுறையின் போது, சுமார் 6.7 மில்லியன் பயணிகள் எமிரேட்டின் பொது போக்குவரத்து வசதிகள், டாக்ஸிகள் மற்றும் பகிரப்பட்ட போக்குவரத்து வாகனங்களில் (shared transport vehicles) பயணம் செய்துள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை தோராயமாக 6.4 மில்லியனைத் தாண்டியிருந்தது. அத்துடன் கடந்த ஆண்டு, ஈத் அல் அதா இடைவேளையின் போது பொது மற்றும் பகிரப்பட்ட போக்குவரத்து வசதிகளையும் டாக்ஸிகளையும் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 6.396 மில்லியனை எட்டியது. இது 2022 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 5.615 மில்லியன் பயணிகளின்  எண்ணிக்கையில் இருந்து 14 சதவீதம் அதிகரிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்பொழுது வெளியான தரவுகளின்படி கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு பொது போக்குவரத்தை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்தாண்டு துபாய் மெட்ரோவின் ரெட் மற்றும் கிரீன் லைன் வழியாகப் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 2.5 மில்லியனை எட்டியதாகவும், 101,000 பேர் டிராமில் பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சுமார் 1.4 மில்லியன் பயணிகள் பொதுப் பேருந்துகளைப் பயன்படுத்தியிருப்பதாகவும் RTA தெரிவித்துள்ளது. RTA வெளியிட்ட தரவுகளின் படி, இந்தாண்டு கடல் போக்குவரத்தும் பயணிகளிடையே ஒரு பிரபலமான தேர்வாக இருந்திருக்கிறது, கிட்டத்தட்ட 280,000 பயணிகள் வாட்டர் டாக்ஸி, அப்ரா போன்ற கடல் போக்குவரத்து வசதிகளில் பயணித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்று டாக்ஸி சேவைகளும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன, மேலும் பகிரப்பட்ட போக்குவரத்து வாகனங்கள் 350,000 பயணிகளைக் கையாண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!