அமீரக வானில் தென்பட்ட கோடையின் முடிவை குறிக்கும் “சுஹைல் நட்சத்திரம்”..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைகாலம் முடிவுக்கு வருவதை குறிக்கும் ‘சுஹைல் நட்சத்திரம்’ இன்று அதிகாலை 5.20 மணிக்கு அல் அய்ன் பகுதியில் காணப்பட்டதாக அமீரகத்தின் புயல் மையம் அறிவித்துள்ளது. இதனை தனது X தளத்தில் வெளியிட்டதுடன், எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் உறுப்பினரான தமிம் அல்-தமிமி எடுத்த புகைப்படத்தையும் புயல் மையம் பகிர்ந்துள்ளது.
சுஹைல் நட்சத்திரம் என்பது வானிலை மாற்றத்தின் முதல் அறிகுறிகளைக் குறிக்கும் ஒரு நிகழ்வாகும். அரபு நாடுகளில் “சுஹைல் எழுந்தால் இரவு குளிர்ச்சியடையும்” என்று கூறப்படும் பழமொழியும் உண்டு. இதனால் நாடு முழுவதும் வெப்பநிலை உடனடியாகக் குறையாவிட்டாலும், இரவு நேர வெப்பநிலை படிப்படியாகக் குறையத் தொடங்கும்.
சுஹைல் நட்சத்திரம் தென்பட்ட பிறகு பருவங்கள் எவ்வாறு மாறுகின்றன?
1. முதல் நிலை (sufriya): சுஹைல் நட்சத்திரம் தென்பட்ட நாளிலிருந்து சுமார் 40 நாட்களில் கடுமையான கோடை வெப்பமானது படிப்படியாக குறைந்து குளிர்ந்த வெப்பநிலைக்கு மாறும் நிலையாகும்.
2. இரண்டாம் நிலை (Wasm): அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் வானிலை படிப்படியாக சீராகி பகல் மற்றும் இரவு நேரங்களில் குளிரந்த வெப்பநிலைக்கு மாறும் நிகழ்வாகும்.
3. மூன்றாம் நிலை (winter): சுஹைல் நட்சத்திரம் உதயமான 100 நாட்களுக்குப் பிறகு அமீரகம் முழுவதும் குளிர் காலம் தொடங்கும் நிகழ்வாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel