அமீரக செய்திகள்

துபாய்: சுற்றுலா பயணிகள் துபாய் காவல்துறையை எளிதாக தொடர்பு கொள்வது எப்படி..??

துபாய்க்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எந்தவொரு விசாரணைகள், பரிந்துரைகள் அல்லது புகார்களுக்கு துபாய் காவல்துறையை அணுகி அதற்கான தீர்வை காணலாம். சுற்றுலா பயணிகளுக்கு இந்த வசதியை எளிதாக்கும் பொருட்டு குற்றப் புலனாய்வுப் பொதுத் துறையின் சுற்றுலா காவல் துறையால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் துபாய் காவல்துறையானது ஐந்து சேனல்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் காவல் துறையை தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

சுற்றுலா காவல் துறையின் இயக்குனர் பிரிகேடியர் கல்பான் ஒபைத் அல் ஜல்லாஃப், இந்த முயற்சிகள் துபாய் நகரை வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், வருகை தருவதற்கும், முதலீடு செய்வதற்கும் உலகின் சிறந்த நகரமாக துபாயை மாற்றும் துபாய் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது என்று கூறியுள்ளார். மேலும் துபாயில் சுற்றுலா பயணிகளின் பயண அனுபவங்களை மேம்படுத்துவதற்காக சர்வதேச சுற்றுலாப் பயணிகளுடன் ஈடுபடுவதற்கான துறையின் உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐந்து சேனல்களில், iOS, Android மற்றும் Huawei சிஸ்டங்களில் கிடைக்கும் துபாய் போலீஸ் ஸ்மார்ட் அப்ளிகேஷனின் சமீபத்திய பதிப்பு, சுற்றுலாப் பயணிகள் விசாரணைகள் மற்றும் அறிக்கைகளை எளிதாகச் சமர்ப்பிக்க அனுமதிக்கிறது. இரண்டாவது தகவல் தொடர்புச் சேனலாக சுற்றுலாப் பயணிகள் துபாய் காவல்துறையின் www.dubaipolice.gov.ae என்ற இணையதளத்தில் அணுகலாம்.

மூன்றாவதாக துபாய் முழுவதும் அமைந்துள்ள ஸ்மார்ட் காவல் நிலையங்களுக்கு (SPS) வருகை தருவதன் மூலம் புகாரளிக்கலாம். இவை மனித தலையீடு இல்லாமல் 24 மணி நேரமும் செயல்படுகின்றன. நான்காவது சேனல் 901 என்ற எண்ணில் இயங்கும் கால் சென்டர் ஆகும், இது சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வரும் அவசரமற்ற அழைப்புகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது சேனல் துபாய் போலீஸின் டூரிஸ்ட் போலீஸ் மின்னஞ்சலாக [email protected] என்ற மின்னஞ்சல் பயன்பாட்டில் இருக்கின்றது.

துபாய் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்த தகவல் தொடர்பு சேனல்கள் 3,509 வினவல்கள் (queries) மற்றும் பரிந்துரைகளைப் பெற்றதாக அல் ஜல்லாஃப் குறிப்பிட்டுள்ளார். “இழந்த பொருட்களை மீட்டெடுக்க, சுற்றுலாப் பயணிகள் தங்கள் தங்குமிடங்கள் அல்லது சொந்த நாடுகளுக்குத் திரும்புதல் போன்ற பல செயல்கள் மூலம் துபாயில் சுற்றுலா பயணிகளின் ஒட்டுமொத்த அனுபவத்தை இது மேம்படுத்துகிறது” என்று அல் ஜல்லாஃப் கூறியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!