துபாய்: மெட்ரோ ஸ்டேஷனிற்கு அருகில் உள்ள கிடங்கில் இன்று ஏற்பட்ட தீவிபத்து.. புகைமயமாக காட்சியளித்த பகுதி..!!
துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தேராவில் உள்ள அபுபக்கர் அல் சித்திக் மெட்ரோ நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் காலை 9.30 மணியளவில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை கட்டுப்படுத்தினர் என்று அப்பகுதிக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த ஒரு வீடியோவில், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய இந்த பகுதியில் கடுமையான புகை ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் புகைமயமாக காட்சியளித்துள்ளது.
மேலும் குறைந்தது மூன்று தீயணைப்பு வாகனங்கள் இந்த அவசரநிலைக்கு பதிலளித்தன என கூறப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் எப்போது தீ அணைக்கப்பட்டது என்பது குறித்து துபாயின் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை.
இதே போல் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை சத்வா பகுதியில் எரிபொருள் டேங்கர் ஒன்று தீ பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர் என்றும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel