தீபாவளி சிறப்பு ‘துபாய் டூட்டி ஃபிரீ’ புரமோஷனில் $1 மில்லியனை பரிசாக வென்ற அதிர்ஷ்டசாலி..!!

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் துபாய் டூட்டி ஃப்ரீ (Dubai duty free) சார்பாக நடத்தப்பட்ட தீபாவளி கொண்டாட்ட சிறப்பு டிராவில், கத்தாரை தளமாகக் கொண்ட பாகிஸ்தானியர் ஒருவர் 1 மில்லியன் டாலர்களை பரிசாக வென்று அசத்தியுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றான தீபாவளியை குறிக்கும் வகையில், விமான நிலையத்தில் தீபம் ஏற்றப்பட்டு பாரம்பரிய இந்திய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.
கத்தாரின் தோஹாவில் உள்ள பாகிஸ்தானியர் காலித் பர்வேஸ் என்பவர், துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 இல் அக்டோபர் 18 அன்று வாங்கிய டிக்கெட் எண் 4571 உடன் மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 478 இல் $1 மில்லியன் வென்றுள்ளார். கடந்த 1999 முதல் நடைபெறும் மில்லினியம் மில்லியனர் டிராவில் பரிசு பெற்ற 26வது பாகிஸ்தானியர் பர்வேஸ் ஆவார்.
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் துபாய் டூட்டி ப்ரீ கொண்டாடிய தீபாவளி பண்டிகையில், துபாய்க்கான இந்திய தூதரக அதிகாரி சதீஷ் குமார் சிவன் கலந்துகொண்டுள்ளார். மேலும், இந்த டிராவில் மூன்று சொகுசு வாகனங்களின் வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.
லெபனான் நாட்டவரான ஹாடி சிடானி, துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 இல் அக்டோபர் 5 அன்று வாங்கிய ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் சீரிஸ் 1895 இல் டிக்கெட் எண் 264 உடன் BMW 740i M ஸ்போர்ட் காரை வென்றுள்ளார்.
இதற்கிடையில், அஜ்மானில் வசிக்கும் 38 வயதான இந்தியரான அவிஷ் தோட்டுபரம்பத், அக்டோபர் 13 அன்று ஆன்லைனில் வாங்கிய ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் சீரிஸ் 600 இல் டிக்கெட் எண் 357 இல் BMW R12 மோட்டார் பைக்கை வென்றுள்ளார். 3 ஆண்டுகளாக அஜ்மானில் வசிக்கும் தோட்டப்பரம்பத் இரண்டு வருடங்களாக துபாய் டூட்டி ஃப்ரீ புரமோஷனில் தொடர்ந்து பங்கேற்று வருவதாக கூறியுள்ளார்.
துபாயில் வசிக்கும் 43 வயதான எகிப்திய நாட்டவரான முகமது அஷ்மாவி, துபாய் சர்வதேச விமான நிலையத்தின் கான்கோர்ஸ் D இல் அக்டோபர் 6 ஆம் தேதி வாங்கிய ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் சீரிஸ் 601 இல் இந்திய ஸ்கவுட் பாபர் மோட்டார் பைக் எண் 579ஐ வென்றுள்ளார். 12 ஆண்டுகளாக துபாயில் வசிக்கும் இவர் 10 ஆண்டுகளாக துபாய் டூட்டி ஃப்ரீ ப்ரோமோஷனில் தொடர்ந்து பங்கேற்று வந்துள்ளார்.
இதற்கு முந்தைய தொடர் வெற்றியாளர், துபாயில் வசிக்கும் 50 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமித் சரஃப், மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 477 இல் டிக்கெட் எண் 2813 உடன் $1 மில்லியனை வென்ற அதிர்ஷ்டசாலி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel