துபாய்: பயணிகளுக்கு குட் நியூஸ்.. 4 பேருந்து நிலையங்களில் இலவச wifi வசதி.. RTA அறிவிப்பு..!!
துபாயில் இருக்கக்கூடிய நான்கு முக்கிய பேருந்து நிலையங்களில் இன்று (டிசம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை) முதல் இலவச வைஃபை வழங்கப்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.
இந்த இலவச சேவையானது முதலில் சத்வா, யூனியன், அல் குபைபா மற்றும் கோல்ட் சூக் ஆகிய பேருந்து நிலையங்களில் செயல்படுத்தப்படும் என்றும், பின்னர் விரைவில் அனைத்து நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் சேவையானது விரிவுபடுத்தப்படும் என்றும் RTA மேலும் கூறியுள்ளது.
மேலும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமானது (RTA) அமீரக தேசிய தின விடுமுறையை முன்னிட்டு பயணிகள் நகரம் முழுவதும் வசதியாகப் பயணம் செய்வதை உறுதி செய்வதற்காக பொதுப் போக்குவரத்து வசதிகளின் இயக்க நேரத்தை நீட்டித்துள்ளது.
அதற்கிணங்க துபாய் மெட்ரோ மற்றும் டிராம் விடுமுறை நாட்களில் கூடுதல் மணிநேரம் இயங்கும் என்றும், அதே போல் அப்ரா, வாட்டர் டாக்சிகள் மற்றும் ஃபெர்ரி உள்ளிட்ட அனைத்தின் சேவை நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் எமிரேட்டில் பொது பார்க்கிங் பகுதிகளில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் தெரிவித்திருந்தது. மேலும், இது மல்டி லெவல் டெர்மினல்களில் பார்க்கிங் செய்வதற்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel