தேசிய தின கொண்டாட்டத்தில் ‘பார்ட்டி ஸ்ப்ரே’ பயன்படுத்தினால் 1,000 திர்ஹம்ஸ் அபராதம்..!! அபுதாபி போலீஸ் எச்சரிக்கை..!!
அபுதாபி குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அபராதம் மற்றும் பிளாக் பாயிண்ட்களை தவிர்ப்பதற்காக, நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்களும் தேசிய தினத்தை பாதுகாப்பாகக் கொண்டாடுமாறு அபுதாபி காவல்துறை இன்று ஞாயிற்றுக்கிழமை தனது X பக்கத்தில் அறிவித்துள்ளது.
2,000 திர்ஹம் அபராதம் மற்றும் 60 நாட்களுக்கு காரை ஜப்தி செய்வதோடு கூடுதலாக 23 பிளாக் பாயின்ட்களைத் தவிர்க்க, குடியிருப்பாளர்கள் கார்களின் ஜன்னல்கள் மற்றும் சன்ரூஃப்களுக்கு வெளியே தொங்கிகொண்டு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர். மேலும் தங்கள் உயிருக்கும் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் வகையில் காரை ஓட்டிச் செல்வது குற்றம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கொண்டாட்டத்தின் போது பார்ட்டி ஸ்ப்ரேயைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள், பயணிகள் அல்லது பாதசாரிகளுக்கு 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்பதுடன் அவர்களுக்கு 6 பிளாக் பாயிண்ட்ஸ் வழங்கப்படும் என்றும் அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தவிர, கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் ஈத் அல் எதிஹாதைக் கொண்டாடுவதற்கான வழிகாட்டுதல்களையும் கோடிட்டுக் காட்டியது. அதில் சீரற்ற அணிவகுப்புகள் அல்லது கூட்டங்கள், ஸ்டண்ட் அல்லது போக்குவரத்திற்கு இடையூறாக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel