சவுதியில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..

சவூதியில் கடந்த ஒரு சில தினங்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில் திங்கட்கிழமையன்று மக்கா, ஜித்தா, மதீனா உள்ளிட்ட சவுதி அரேபியாவின் பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில், இன்றும் இந்த பகுதிகளில் மழை பெய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வானிலை இன்றும் (செவ்வாய்க்கிழமை) நீடிக்கும் என்பதால், நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வரை பல பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கனமழை காரணமாக, விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விமானம் தாமதம் ஏற்படுவது குறித்து சவுதி அதிகாரிகள் பயணிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
முன்னதாக, மக்கா பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், “வானிலை நிலை காரணமாக, சில விமான தாமதங்கள் ஏற்படலாம். விமான அட்டவணை குறித்த அறிவிப்புகளுக்கு விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்” என்று நேற்று அறிவித்திருந்தனர்.
ஆகவே, உத்தியோகபூர்வ விமான சேனல்கள் மூலம் பயணிகள் விழிப்புடன் இருக்கவும், விமான நேர அட்டவணையில் புதுப்பித்த நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
NCM வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில், புதன் கிழமை, ஜனவரி 8 ஆம் தேதி வரை கனமழை, ஆலங்கட்டி மழை, அதிக அலைகள் மற்றும் தூசி மற்றும் பலத்த காற்றின் காரணமாக தெரிவுத்திறன் குறைவது பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சீரற்ற வானிலைக்கு மத்தியில், சவூதி ரெட் கிரசண்ட் ஆணையத்தின் (SRCA) மக்கா பிராந்திய கிளை அதன் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை, ஆம்புலன்ஸ் நிலையங்கள், விரைவான பதில் குழுக்கள் மற்றும் தன்னார்வ ஆம்புலன்ஸ் பிரிவுகளின் முழு செயல்பாட்டு தயார்நிலையை உறுதிப்படுத்தியிருப்பதாக சவூதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. மோசமான வானிலையின் போது, சாலைப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், எச்சரிக்கையுடன் செயல்படவும் SRCA பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel