வளைகுடா செய்திகள்

காலாவதியான வாகனப் பதிவுடன் வாகனம் ஓட்டுவது பெரும் குற்றம்.. போக்குவரத்து சட்டத்தை கடுமையாக்கிய சவூதி அரசு..

சவூதி அரேபியாவில் காலாவதியான வாகனப் பதிவுடன் வாகனம் ஓட்டுவது இப்போது பெரும் குற்றங்களில் ஒன்றாக கருதப்படும் என்று சவூதி அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சவூதி அரேபியா அதன் போக்குவரத்துச் சட்டத்தை திருத்தம் செய்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஆகவே, இந்த புதுப்பிக்கப்பட்ட சட்டத்தின் கீழ் அபராதங்களைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் தங்கள் வாகனப் பதிவை உடனடியாக புதுப்பிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டில் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதையும், ஒழுங்குமுறை கட்டமைப்பை நவீனமயமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ள இந்த திருத்தங்கள் சவூதி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது குறித்த ஒரு அரச ஆணை (எண். M/140) போக்குவரத்துச் சட்டத்தின் 71 வது பிரிவில் காலாவதியான உரிமத்துடன் வாகனம் ஓட்டுவது ஒரு குற்றமாகச் சேர்க்கும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்களை பிரதிபலிக்கும் வகையில் போக்குவரத்துச் சட்டத்தின் நிர்வாக விதிமுறைகளை உள்துறை அமைச்சகம் புதுப்பிக்க வேண்டும் என்றும் ஆணையில் கூறப்பட்டுள்ளது. அமைச்சரவையின் இந்த முடிவு ஷூரா கவுன்சிலுடனான (Shura Council) ஆலோசனைகள் மற்றும் பொருளாதார மற்றும் மேம்பாட்டு விவகார கவுன்சிலின் (Economic and Development Affairs Council) பரிந்துரைகளைத் தொடர்ந்து வந்துள்ளது.

நாட்டில் சாலை ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்கும் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கும் நாட்டின் அர்ப்பணிப்பை இது எடுத்துக்காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!