ADVERTISEMENT

துபாய்: மீண்டும் துவங்கும் ரமலான் ஸ்ட்ரீட் ஃபுட் பெஸ்டிவல்: நூற்றுக்கணக்கான உணவகங்களுடன் களைகட்டவிருக்கும் கராமா!!

Published: 14 Feb 2026, 6:26 PM |
Updated: 14 Feb 2026, 6:43 PM |
Posted By: Menaka

ரமலான் நெருங்கி வருவதால், துபாய் முழுவதும் பல தெருக்கள் பண்டிகை அலங்காரங்கள், ஒளிரும் விளக்குகள் மற்றும் வண்ணமயமான ரமலான் காட்சிகளால் ஒளிர்கின்றன. மேலும், சிறப்பு இஃப்தார் விருந்துகளுக்கு உணவு இடங்கள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், அல் கராமாவில், நகரத்தின் மிகவும் விரும்பப்படும் சாலையோர உணவுத் திருவிழா மீண்டும் திரும்புகிறது.

ADVERTISEMENT

ஆம், பிரபலமான ‘Ramadan Street Food Festival’ இப்போது நான்காவது ஆண்டில், பிப்ரவரி 19 முதல் மார்ச் 18 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இஃப்தார் நேரத்தில், ​​ஷேக் ஹம்தான் காலனி மீண்டும் ஒரு சிறந்த திறந்தவெளி உணவு மையமாக மாறும், இதனால் சூரியன் மறைவிற்கு பிறகு அப்பகுதி முழுவதும் உற்சாகமான சூழலை உருவாக்கும்.

இந்த ஆண்டு, விழா இரண்டு முக்கிய மண்டலங்களான ஃப்ளேவர் லேன் (flavour lane) மற்றும் கராமா பார்க்கில் கலினரி கிராஸ்ரோட்ஸ் (culinary crossroads) ஆகியவற்றை உள்ளடக்கியது, இவை நடந்து செல்லக்கூடிய உணவுப் பாதையால் (walkable food trail) இணைக்கப்பட்டுள்ளன. இந்த மாதத்தில் 70,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

கொண்டாட்டத்தின் இரண்டு கட்டங்கள்

தினமும் இஃப்தார் விருந்து முதல் அதிகாலை 2 மணி வரை செயல்படும் இந்த விழா இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 19 முதல் 28 வரையிலான முதல் கட்டம், அலங்கரிக்கப்பட்ட உணவகங்கள் பண்டிகை சூழலை உருவாக்கும். அடுத்ததாக மார்ச் 1 முதல், நேரடி இசைக்கலைஞர்கள், ரோமிங் கலைஞர்கள், LED ஸ்டில்ட் வாக்கர்ஸ் மற்றும் கராமா பூங்காவில் ஒரு முக்கிய மேடை நிகழ்வுடன் முழு திருவிழா அனுபவம் தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மார்ச் 1 முதல் ஒவ்வொரு மாலையும், கதைசொல்லல், குழந்தைகள் நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி இசை உள்ளிட்ட ஆறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் இரவு 9:15 முதல் இரவு 10:30 மணி வரை மற்றும் வார இறுதி நாட்களில் இரவு 11 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஆண்டு ஒரு முக்கிய சிறப்பம்சமாக 18 சமூக இஃப்தார் விருந்துகள் இருக்கும். இந்த இப்தார் விருந்துகள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இயங்குகின்றன, இது ரமலான் விருந்தோம்பலின் உண்மையான உணர்வை பிரதிபலிக்கிறது. கூடுதலாக, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூட்டு உணவு மற்றும் அர்த்தமுள்ள உரையாடல்களை ஊக்குவிக்க ஒரு சிறப்பு சமூக நீண்ட மேஜை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு மற்றும் குடும்ப வேடிக்கை

புனித மாதத்தின் போது, மார்ச் 1 முதல், இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனிடையே, அங்குள்ள கார்னிவல் மண்டலம் குடும்பங்களுக்கு கூடுதல் பொழுதுபோக்கை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

‘Ramadan Street Food Festival’ என்பது, வுல்ஃபா சீசனின் (Season of Wulfa) கீழ் வழங்கப்படும் துபாயில் பரந்த ரமலான் திட்டத்தின் முக்கிய பகுதியாகும். நகரம் முழுவதும் நடைபெறும் கொண்டாட்டத்தில் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் ரமலான் பை தி பே, எக்ஸ்போ சிட்டி துபாயில் ஹாய் ரமலான் மற்றும் லயாலி அல் வுல்பா கலாச்சார கூட்டங்கள் போன்ற நிகழ்வுகள் அடங்கும்.

ஒட்டுமொத்தத்தில், உணவு, கலாச்சாரம் மற்றும் பகிரப்பட்ட அனுபவங்கள் மூலம், கராமா ஃபெஸ்டிவல் ரமலானின் மதிப்புகளை ஒரு சிறந்த சமூக இடத்திற்கு கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel