ADVERTISEMENT

துபாய் லூப் கட்டுமானப் பணிகள் தொடக்கம்: பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!!

Published: 25 Apr 2026, 9:05 AM |
Updated: 25 Apr 2026, 9:05 AM |
Posted By: Menaka

அமீரகவாசிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் துபாய் லூப் திட்டத்தின் ஆரம்பகட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்நிலையில், நிலத்திற்கு கீழே வரும் சுரங்கப்பாதை போக்குவரத்து அமைப்பைக் கட்டமைப்பதற்கான முதல் படியாக, முன்வார்ப்பு கான்கிரீட் பாகங்களின் உற்பத்தி தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாக தி போரிங் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்த முன்னேற்றத்தை டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொலைநிலைப் பணிப் பயன்பாடுகளுக்கான அமைச்சர் ஓமர் சுல்தான் அல்-ஒலாமா வரவேற்பதாகக் கூறியதுடன், அமீரகத்திற்கு அடுத்த தலைமுறைப் போக்குவரத்தைக் கொண்டு வருவதில் இது ஒரு முக்கிய மைல்கல் என்றும் விவரித்துள்ளார். மேலும், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்திற்கும் தி போரிங் நிறுவனத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பைப் பாராட்டிய அவர், இந்தத் திட்டத்திற்கான தனது அர்ப்பணிப்பிற்காக எலான் மஸ்க்கையும் பாராட்டியுள்ளார்.

துபாயில் ஆட்சேர்ப்பு முயற்சி

இந்நிலையில், என்ஜினியரிங், கட்டுமானம் மற்றும் செயல்பாடுகள் ஆகிய துறைகளில் உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு நிபுணர்களை அழைக்கும் ஒரு ஆட்சேர்ப்பு இயக்கத்தையும் இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. கட்டுமான மேலாளர்கள் (construction manager), பிரிகாஸ்ட் ஆபரேஷன்ஸ் தலைவர் (head of precast operation), சிவில் மற்றும் புவித்தொழில்நுட்பப் பொறியாளர்கள் (civil, structural and geotechnical engineer), கட்டிடக் கலைஞர்கள், மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் ஆகிய பதவிகளுடன், கொள்முதல் மற்றும் திட்ட மேம்பாட்டுப் பணிகளும் (architect, mechanical engineer and environmental health and safety leader. Roles in project development, procurement and recruitment) காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

திட்ட விவரங்கள்

துபாய் லூப் என்பது இடைநிறுத்தங்கள் இன்றி, அதிவேகமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சுரங்கப்பாதையில் அமைக்கப்படும், முழு மின்சாரப் போக்குவரத்து அமைப்பாகும். இது ஒரு வழக்கமான மெட்ரோவை விட, ஒரு சுரங்கப்பாதை நெடுஞ்சாலை போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம் 2026 உலக அரசாங்கங்கள் உச்சி மாநாட்டின் போது கையெழுத்தானது. இதன் முதல் கட்டம், துபாய் சர்வதேச நிதி மையம் மற்றும் துபாய் மால் ஆகியவற்றை இணைக்கும் நான்கு நிலையங்களுடன் 6.4 கி.மீ. தூரத்தை உள்ளடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

எதிர்கால விரிவாக்கத் திட்டங்களில், துபாய் உலக வர்த்தக மையம் மற்றும் பிசினஸ் பே போன்ற முக்கிய மையங்களை இணைக்கும் 19 நிலையங்களுடன் கூடிய 22.5 கி.மீ. வலையமைப்பு அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகள் வெளியிட்டுள்ள விபரங்களின் படி, வடிவமைப்பு ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகள் இறுதி செய்யப்பட்ட பிறகு, 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சுரங்கப்பாதைகள் 3.6 மீட்டர் விட்டம் கொண்டவையாக இருக்கும். மேலும், விரைவான கட்டுமானம், குறைந்த செலவுகள் மற்றும் குறைந்தபட்ச இடையூறு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இவை கட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், முதல் கட்டப் பணிக்கு சுமார் 154 மில்லியன் டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆயத்தப் பணிகள் முடிந்த சுமார் ஒரு வருடத்தில் இது நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், முழுத் திட்டத்திற்கும் 545 மில்லியன் டாலர் செலவாகும் என்றும், சுமார் மூன்று ஆண்டுகளில் இப்பணி நிறைவடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, துபாய் லூப் கட்டி முடிக்கப்பட்டதும், அது நகரின் முக்கியப் பகுதிகள் முழுவதும் வேகமான, நேரடியான மற்றும் மாசுபாடற்ற பயணத்தை வழங்கும் ஒரு புதிய நகர்ப்புறப் போக்குவரத்து மாதிரியை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel