ADVERTISEMENT

குவைத் – மதுரை இடையே விமான சேவையை அறிமுகப்படுத்தும் ஜசீரா ஏர்வேஸ்..!!

Published: 6 Apr 2026, 8:59 PM |
Updated: 6 Apr 2026, 8:59 PM |
Posted By: Menaka

குவைத்தின் பட்ஜெட் கேரியரான ஜசீரா ஏர்வேஸ் (Jazeera Airways) தனது வளர்ந்து வரும் விமான போக்குவரத்து வலையமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்தியாவில் மதுரை மற்றும் கோவா ஆகிய இரண்டு விமான நிலையங்களுக்கும், சவுதி அரேபியாவின் தம்மாம் விமான நிலையம் வழியாக புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்த புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், சவுதி அரேபியாவின் தம்மாம் வழியாக குவைத்தை பல்வேறு இந்திய நகரங்களுடன் இணைக்கும் ஜசீரா ஏர்வேஸ்ஸின் வழித்தடங்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான இணைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விரிவாக்கம் அமைந்துள்ளது.

விமான செயல்பாட்டில் தற்போது சவால்கள் இருந்து வரும் நிலையிலும், இந்த புதிய வழித்தடங்கள் சவுதி அரேபியாவில் உள்ள விமான நிறுவனத்தின் இரட்டை தள செயல்பாட்டு அமைப்பு மூலம் இயக்கப்படும் என்றும், இது பயணிகளின் தடையற்ற பயணத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இது குறித்து விமான நிறுவனத்தின் தலைவர் பேசுகையில், முந்தைய செயல்பாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் விமான நிறுவனத்தின் இருப்பு இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றும், இது வலுவான தேவையையும், இணைப்பைப் பேணுவதில் தொடர்ச்சியான கவனத்தையும் பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குவைத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைவதற்கும், வேலைக்குத் திரும்புவதற்கும், குவைத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார உறவுகளைப் பேணுவதற்கும் பயணம் ஒரு முக்கியப் பங்காற்றும் இக்காலகட்டத்தில், இந்த புதிய வழித்தடங்கள் முக்கியமானவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

குவைத் மற்றும் சவுதி அரேபியா இடையேயான வான் மற்றும் தரைவழி இணைப்பை ஒருங்கிணைக்கும் இரட்டை தள அமைப்பானது, நம்பகமான பயண விருப்பங்களை உறுதி செய்வதோடு, குவைத்திற்கு அத்தியாவசிய சரக்குகளைத் தொடர்ந்து கொண்டு செல்வதற்கும் ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel