ADVERTISEMENT

100-க்கும் மேற்பட்ட சோஷியல் மீடியா அக்கவுண்ட்களை முடக்கிய அமீரகம்!! ஈரான் தாக்குதல்களின் போது வன்முறையைத் தூண்டியவர்களுக்கு எதிரான நடவடிக்கை..

Published: 27 Apr 2026, 8:13 PM |
Updated: 27 Apr 2026, 8:13 PM |
Posted By: Menaka

ஈரான் மோதல் நடைபெற்ற காலகட்டத்தில் பிராந்திய நடத்தை விதிகளை மீறும் வகையில், வன்முறையைத் தூண்டும் விதமாக தகவல்களை வெளியிட்டதால், சமீபத்திய மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்று ஐக்கிய அரபு அமீரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இன்று நடைபெற்ற ‘Gulf Influencers’ மாநாட்டில் பேசிய அப்துல்லா பின் முகமது பின் புட்டி அல் ஹமீத், வன்முறையைத் தூண்டும் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு மன்ற நாடுகளிடையே ஒப்புக் கொள்ளப்பட்ட நெறிமுறைத் தரங்களை மீறும் தகவல்களை பதிவிட்டதால் அந்த அக்கவுண்ட்கள் நீக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

இது குறித்து பேசுகையில், வளைகுடா ஒத்துழைப்பு மன்ற நாடுகள் கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தம் உள்ளது, அது நாடுகள் மற்றும் தேசிய சின்னங்கள், மதங்கள், பொது நடத்தைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை மதிக்க வேண்டும் என்று கோருகிறது எனவும் அல் ஹமீத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், முடக்கப்பட்ட கணக்குகள் அனைத்தும் எந்தவொரு குறிப்பிட்ட நாட்டுடனும் தொடர்புடையவை அல்ல என்றும், மாறாக இந்தக் கொள்கைகளை மீறியதற்காகவே அவை நீக்கப்பட்டன என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திற்கு எதிரான எச்சரிக்கை

பிளவுபடுத்தும் அல்லது மரியாதையற்ற ஆன்லைனில் பதிவிடப்படும் தகவலானது, தாக்குதலை நடத்தும் மற்றும் தாக்குதலுக்கு ஆளாகும் இரண்டு நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் என்று அந்த அதிகாரி எச்சரித்துள்ளார். மேலும், இத்தகைய நடத்தையை ஒழுங்குபடுத்துவது சமூகத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு இறையாண்மை உரிமை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

ஆகவே, இதுபோன்ற சர்ச்சைகளில் அளவுக்கு அதிகமாக கவனம் செலுத்துவதை விட, சாதனைகளை முன்னிலைப்படுத்துமாறு பிராந்திய ஊடகங்களை அல் ஹமீத் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இந்த அமர்வின் போது, வளைகுடாவைப் பற்றிய சர்வதேச பார்வைகளை மறுவடிவமைக்க, உண்மையானவற்றை பேசுதலின் முக்கியத்துவத்தை பேச்சாளர்கள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel