ADVERTISEMENT

UAE: வில்லாவில் இருந்து ACயைத் திருடிய நபர்.. நாடு கடத்த உத்தரவிட்ட நீதிமன்றம்!!

Published: 17 Apr 2026, 8:07 AM |
Updated: 17 Apr 2026, 8:07 AM |
Posted By: Menaka

ஷார்ஜா எமிரேட்டில் கட்டுமானத்தில் உள்ள ஒரு வில்லாவிலிருந்து AC யூனிட்களை திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு அரபு நாட்டவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த ஷார்ஜா நீதிமன்றம், அவரை நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

இது சம்பந்தப்பட்ட காவல்துறை அறிக்கைகள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் விசாரணை முடிவுகள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்ததைத் தொடர்ந்து ஷார்ஜா சிறு குற்ற நீதிமன்றம் (Sharjah Misdemeanour Court) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

வழக்கு விபரங்கள்

நீதிமன்ற பதிவுகளின் படி, கட்டுமானத்தில் உள்ள தனது வில்லாவிலிருந்து பல ஏசி யூனிட்கள் காணாமல் போனதாக ஒரு சொத்து உரிமையாளர் புகார் அளித்தபோது இந்த வழக்கு தொடங்கியது. பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில், அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி, ஒரு சந்தேக நபரை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்

ADVERTISEMENT

மேலும், இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டாவது சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், அவரைக் கண்டுபிடித்துப் பிடிக்க முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்ததுடன், சமூக ஊடகங்கள் வாயிலாக வேலைவாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, ​​இரண்டாவது சந்தேக நபர் தன்னைத் தொடர்புகொண்டு அந்தப் பங்களாவிற்கு வருமாறு அழைத்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், AC க்களை அகற்றி எடுத்துச் செல்ல உதவுமாறு தனக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், அவை திருடப்பட்டவை என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிகாரிகளின் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம், திருட்டு மற்றும் சட்டவிரோதமாக நுழைந்த குற்றத்திற்காக அவரைக் குற்றவாளி எனக் கண்டறிந்தது, ஆனால் சிறைத்தண்டனையை விட நாடு கடத்துவதே மிகவும் பொருத்தமான தண்டனை என்று தீர்ப்பளித்தது.

இதே வழக்கில், இன்னும் தலைமறைவாகவே இருக்கும் இரண்டாவது சந்தேக நபருக்கு எதிராக அவர் இல்லாத நிலையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அவரது கைது நடவடிக்கையை உறுதி செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்வதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சொத்து தொடர்பான குற்றங்களைக் கையாள்வதற்கும், சட்டப்பூர்வ பொறுப்புக்கூறலை அமல்படுத்துவதற்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதிகாரிகள் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளை இந்த வழக்கு எடுத்துக்காட்டுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel