ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வசிக்கும் மக்கள் ஏப்ரல் 27, திங்கட்கிழமையன்று தெளிவான வானிலையையும், அவ்வப்போது மேகமூட்டமான சூழலையும் எதிர்பார்க்கலாம் என்று நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், இன்றைய தினம் நாடு முழுவதும் வெப்பநிலை உயரக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 42°C வரை எட்டக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, துபாயில் குறைந்தபட்சம் 27ºC முதல் அதிகபட்சமாக 37ºC வரை எட்டும் என்றும், அதேவேளையில் அபுதாபியில் 28ºC முதல் அதிகபட்ச வெப்பநிலை 39ºC வரை பதிவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாடு முழுவதும் வடகிழக்கு முதல் வடமேற்கு திசையிலிருந்து, லேசானது முதல் மிதமானது வரையிலான காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காற்றின் வேகம் அவ்வப்போது அதிகரிக்கக்கூடும் என்பதால், வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் புழுதிப் புயல் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் நிலவரங்களைப் பொறுத்தவரை, அரபிக்கடல் மற்றும் ஓமன் கடலில் அலைகள் லேசானது முதல் மிதமானது வரை இருக்கும் என்றாலும், அவ்வப்போது கடல் சீற்றத்துடன் காணப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மொத்தத்தில், காற்று வேகம் அதிகரிக்கும்போது அவ்வப்போது தூசுக்காற்று வீசக்கூடும் என்பதால், கடந்த வாரங்களை விட இன்றைய தினம் அதிக வெப்பமாக உணரப்படும் என்று குடியிருப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel